படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Thursday, October 13, 2011

ஒரு சிறிய நினைவுகூறல் - 2

1996 ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெரும் பள்ளியில், பள்ளிக்குச் சொந்தமான விடுதியில் தங்கி பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு கண்டிப்பான விடுதி மற்றும் காப்பாளர்களைக் கொண்டது. பள்ளி முடிந்த பின் தனி வகுப்புகளுக்குச் செல்ல மாலை ஆறு மணிவரை அனுமதியுண்டு. தேர்வுகள் அல்லாத சமயங்களில் சனிக்கிழமை முதல் காட்சி திரைப்படத்திற்கு சென்று வர அனுமதியுண்டு.

ஒரு முறை எனக்கு சிறிது உடல்நலம் சரியிலை. மருத்துவரிடம் சென்று வரவேண்டும் என்று விடுதி காப்பாளரிடம் (மிகவும் கண்டிப்பானவர்) சிறப்பு அனுமதிபெற்று (வயிறு வலிக்கிறது என்று சொல்லி) மாலை ஏழு மணிக்குமேல் வைத்தியரிடம் சென்றேன். துணைக்கு என் அறை நண்பர் ஒருவரும் வந்தார். நாங்கள் சென்றது தெரிந்த ஒரு சித்த மருத்துவரிடம். காலையில் சரியாகிவிடும் என்று சொல்லி அவரிடம் இருந்த மருந்தை சுடுநீரில் கலந்து பருகச்சொன்னார்.

விடுதிக்குத் திரும்பும் வழியில் சரவணா ஹோட்டல் கண்ணில் படவே நண்பனுடன் சென்று கொத்து பரோட்டா இரண்டு சொல்லிவிட்டு ஒரு மேஜையில் வந்து அமர்ந்தோம். நாங்கள் ஏதோ பேசிக் கொண்டே அருகில் அமர்ந்திருந்தவரை கண்டவுடன் இருவரின் முகமும் வெளிரிவிட்டது. அவர் எங்களின் விடுதிக் காப்பாளர். அதற்குள் கொத்து பரோட்டா வந்துவிடவே எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. (வயிற்று வலி என்று சொல்லித்தான் விடுதியை விட்டு வெளியே வந்தோம். மேலும் விடுதியில் தங்கிவிட்டு வெளியில் சாப்பிட அனுமதியில்லை). நாங்கள் முழிப்பதைப்பார்த்த அவர் சாப்பிடுங்கள் என்று சொன்னார். வாழ்க்கையில் அவ்வளவு விரைவாக கொத்து பரோட்டாவை நான் சாப்பிட்டதில்லை. விரைவில் விடுத்திக்கு வந்து படுத்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் என்னை அழைத்த காப்பாளர் பார்த்தாரே ஒரு பார்வை, இன்றைக்கும் மறக்க முடியவில்லை. பிறகு அடுத்த நாள் அந்த சித்த மருத்துவரை விடுதிக்கு அழைத்துவந்து காப்பாளரிடம் பேசவைத்த பிறகே அவருக்கு எங்கள் மேல் நம்பிக்கை வந்தது. வயிற்று வலியும் கொத்து பரோட்டாவும் அடிக்கடி இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறது.

குறிப்பு: எங்களிடம் கண்டிப்பு காட்டிய அந்த காப்பாளர் மட்டும் ஏன் விடுதியில் சாப்பிடாமல் அந்த ஹோட்டலில் சாப்பிடவேண்டும். யார் அவரை கண்டிப்பது?

16 comments:

Anonymous said...

good question...

good incident to read....

Lingesh said...

நன்றி Anonymous நண்பரே!

Anonymous said...

He is not a student, thats why

Anonymous said...

GASC college days manathil oodukirathu...

Lingesh said...

வயதில் பெரியவர்கள் கண்டிப்பதுடன் அவர்களும் வாழ்ந்து காட்டவேண்டும். அப்போதுதான் நம்பகத்தன்மை அதிகரிக்கும். வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி Anonymous நண்பரே.

Lingesh said...

பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்ற காலங்கள் காலத்தால் அழியாது. திரும்பவும் வராது. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி Anonymous நண்பரே.

Anonymous said...

i thk its wonderful diamond jubile hr sec school right..........near to that enum supera na girls hr sec school is also there......anga enum strict ........hostel girls not to see school gate...not to open windows in hostel .Its to avoid seeing outside.....even restriction to friendship with dayscholar girls.......no birthday celebration....not to give chocolate to friends for that birthday...if they found chocolate papers automatically scrunizing to search that birthday girl to scold in common prayer....even some girls hesitate to get chocolate from that birthday baby in fear of warden.....even in study hours we should not face outside and study.we have to face wall and study....that warden s really horriable .when we make mistake......she scolding infront of all hostel girls in common prayer...daily we have to wakeup at 5'clock......whether we brush r not brush that is not matter...but compulsory to that prayer.....after that they will check suddenly attendance.......if any one of the roomies s missing,Rest of them also got scolding and have to pay fine...monthly once they allow to go home..... if parent missing identification card.....they r not allow to go home........even a single person s in hostel.they r not feel.they will take care.....but they r not realize how tears in their eyes..even v r not able to waste little bit of food...whatever the problem in that food.......each day serving batch girls have to watch all is anybody wasting.....if it so .....ask to go back and sit to eat.....weekly only once(sunday) is permitted to wash hair bath......that warden s keenly watch al girls hair.....if anybody taking hair bath in week days?not able wash cloths.....we have to put compulsory to dobby for common washing.......even that warden come rounds to check.... is any water flowing in any rooms by washing dress....if parents s not able to sign progress card......v hav to get sign from that warden......she ask us to form seperate line for ranker holders and failures....sometimes she signed failure in two subjects.....otherwise she throw the report card to face in front of all girls in common prayer.........in that school full of Gooseberries trees(naval palam)......not to eat that.....even in playing hours ,we r doing execise it fall on our heads.....mind and eyes is there...but hands s not go there..........like this etc... etc........all these are misery in that days & age.......part of in this incidents make us now to good in character......part of this s make us severe wound to enjoy something in certain things in right time......as i read ur memorable things in schoolings.........i thk u r luck while comparing us.......on that day u r going to hospital for real stomach pain....but on that days we make a group and plan to go hospital without ill to see outside........even they send one lady with us to watch and care....... again they check tablets and watch whether v take that r.....not to escape from that....because if v ill they automatically send us to sickroom.....and put one r two ladies to watch......sometimes it may severe they after one r two weeks at last they automatically send to home........so over strict brings these types of nagative thoughts also in young age.........whatever it s its based on the people face that situvations...finally what i want to say s that warden is not now....she attend sucide ....while am hearing and discuss with my friends....allc of them s not feeling for her death......al r talking about her signs to others.....c the childhood minds never change whatever be good now......

thanks....for sharing ur thoughts......its brings me to share my thoughts in schoolings....i m not talk with u but hear abt u that u r good person from school and college through my seniors and friends....and happy to c now also u r good....even on that days u r rollmodel to lot of guys..........keep going......share these kind of thoughts to know other for do's and not do's...thanks......

Anonymous said...

hai i am also an alumni.87-89.good to hear all those sweet memories

Lingesh said...

நன்றி தோழியே, உங்களது நீண்ட எழுத்துக்களை படிக்கும்போது நிச்சயம் பிரமிப்பாக இருக்கிறது. நீங்கள் கூறியது போன்ற பல கட்டுப்பாடுகள் எங்களது விடுதியிலும் இருந்தது (காலையில் எழுதல், பிராத்தணை, சாப்பிடுதல் உட்பட). நீங்கள் கூறியது போல அளவுக்கு மீறிய கட்டுப்பாடு கூற பல தவறுகளுக்கு வழிவகுக்கும்.

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

Lingesh said...

நன்றி Anonymous அவர்களே.

Sundar said...

Nice Article Lingesh.
KK

Sundar said...

I didnt have chance to stay in hostel. But it is very odd how the experienced teachers and wardens dont understand and fail to show their care and love towards the students. Always pressure once a small kid goes to school (Pre KG) until they complete their education. It used to be until high school. Now I see that happening until they complete post graduation. Some colleges are very strick.

Another thing is that, more than 90% of the kids dont do what they really want to do. Their path get diverted to something to make money rather than what they really like to do. Before they start talking, we teach them to answer as Doctor, Engineer and etc. Could this all be for survival? May be... but that questions their invidiuality???

Lingesh said...

Thank you KK Anna.

Lingesh said...

Your are 100% correct. Our modern schools / colleges are producing 99% of the white color labors. Whether you like it or not, whether you passion it or not, whether you interested it or not. Kids does not have choice. Parents does not have courage to try different.

Sasikumart said...

நன்றிகள் தோழரே... அப்பொழுது கசந்த வாழ்க்கை இப்பொழுது நினைவுகளாய் இனிக்கிறது... மறக்க முடியாத தருணங்கள்... விடுதி வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டது 3 பாடங்கள். 1 ஒழுக்கம் 2 .விவேகம் 3 தேவையான பொழுது என்னை கட்டுப்படுத்திக்கொள்ளும் ஆற்றல்... நினைவுகளுக்கு நன்றி :)

Lingesh said...

கருத்துக்கு மிக்க நன்றி திரு. சசிகுமார் அவர்களே.... வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டங்களும் நமக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டேதான் உள்ளது.

Post a Comment