காதலிக்கிறோம்
எனக்காக நீ
கவிதையாகவில்லை...
உனக்காக நான்
கவிஞனாகவில்லை...
ஆனாலும்
காதலிக்கிறோம்...
கைகோர்த்துக் கொண்டு
கடற்கரை செல்லவில்லை...
கடனுக்குச் சுண்டல்
வாங்கவில்லை...
ஆனாலும்
காதலிக்கிறோம்...
உன்னிடம் எதையும்
எதிர்பார்க்கவில்லை
உன்னைத் தவிர...
என்னிடம்
எதுவுமில்லை
என்னைத் தவிர...
அதனால்
காதலிக்கிறோம்...
4 comments:
உன்னிடம் எதையும்
எதிர்பார்க்கவில்லை
உன்னைத் தவிர...
என்னிடம்
எதுவுமில்லை
என்னைத் தவிர...
நல்ல காதல்
ஆம்.... நல்ல காதல் தான்.... நன்றி சசிகலா அவர்களே...
//என்னிடம்
எதுவுமில்லை
என்னைத் தவிர...
அதனால்
காதலிக்கிறோம்.//
அப்படியுமா உங்களை காதலிக்கிறாங்க...பரந்த மனசுதான் உங்கள் காதலிக்கு
ஹ...ஹா.... நன்றி சி.பி அவர்களே....
Post a Comment