படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Tuesday, January 3, 2012

மலரும் நினைவுகள் - 4 (மனம்)

மனம்



பார்க்கத் துடிக்கும்!
பார்க்கவில்லை என்றால்
பைத்தியம் பிடிக்கும்...

பேசத் துடிக்கும்!
பேசவில்லை என்றால்
உறக்கம் உறங்கிவிடும்...

அர்த்தமற்ற பேச்சுக்கள்
அவசியமற்ற பார்வைகள்...

தேவையில்லா உறவுகள்
தேவைப்பட்டால் கனவுகள்...

பத்துநாள் காதலி
பத்தாம் நாள் தங்கச்சி...

அழகான முகத்தில்
அரை அங்குல தாடிகள்...

அனுபவசாலி என்று
அடுத்தவருக்கு அறிவுரை...

அழகில் இருக்கும்
அழிவை எண்ணி
கடைசியில் கண்ணீர் விடும்...


6 comments:

arasan said...

வரிகளின் வலி உணர முடிகின்றது ... தரமான கவிதை வாழ்த்துக்கள்

Lingesh said...

நன்றி அரசன் அவர்களே...

சசிகலா said...

அழகில் இருக்கும்
அழிவை எண்ணி
கடைசியில் கண்ணீர் விடும்.

நல்ல இருக்கு

Lingesh said...

நன்றி சசிகலா.

மாலதி said...

அதுதான் காதல் பசி இருக்காது தூக்கம் வராது .. இன்னும் எது வேண்டுமானாலும் செய்கிறதா அப்படியானால் அது காதல் ...

Lingesh said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மாலதி அவர்களே....

Post a Comment