படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Sunday, January 8, 2012

படித்ததில் பிடித்தது - 2



வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள் இருக்கவேண்டும். விரும்பியதை அடைவது; அடைந்ததை அனுபவிப்பது. பெரும் புத்திசாலிகளால் மட்டுமே இரண்டாவது குறிக்கோளை அடையமுடியும்.
--லோகம் பி. ஸ்மித்

ஜெயிக்கறதுக்குப் பேர் காதல் இல்லை. மதிக்கறதுக்குப் பேர் தான் காதல்.
--பாலகுமாரன்

நமக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்களில் தான் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும்
--ஆர்தர் ஸ்பியர்


ஒன்றைச் செய்ய விரும்பினால் வழியைக் கண்டறிகிறாய். செய்யாமல் இருக்க விரும்பினால் காரணங்களைக் கண்டுபிடிக்கிறாய்.



தோற்றுவிடுவேனோ என்று ஒருவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே, நிறைய தோல்விகள் கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான்.
--ஹென்றி. சி. லிங்க்.

முயற்சி செய்யும் வரை உங்களால் என்ன முடியும் என்பது உங்களுக்குத் தெரியாது.
--ஹென்றி ஜேம்ஸ்




தோல்வி என்பது மேலும் புத்திசாலித்தனமாக நம் வேலையைத் துவங்குவதற்கான மற்றொரு வாய்ப்பு.
--ஹென்றி ஃபோர்டு

தப்பு செய்யாதவர்கள் என்பவர்கள்
எதையுமே புதிதாக செய்ய முயற்சிக்காதவர்கள்.


முதலில் கீழ்படியக் கற்றுக்கொள்.
கட்டளையிடும் பதவி தானே வரும்!
முதலில் வேலைக்காரனாயிருந்து பழகு.
எஜமானனாக நீ தகுதி பெறுவாய்!
--சுவாமி விவேகானந்தர்

நடக்குமோ நடக்காதோ
நோக்கம் உயர்வானதாய் இருக்கவேண்டும்



பொறுமையாக இருந்தால்
தண்ணீரைக் கூட
சல்லடையில் அள்ளலாம்.
ஆனால் அது உறையும் வரை
காத்திருக்க வேண்டும்!

எவரைப்போல இருக்கவும் முயலாதே..
எவரையும் பின்பற்றாதே..
அப்படிச் செய்தால் உன் இருப்பு போலியாகும்.
அது தற்கொலையை விட மோசமானது.
நீ நீயாக இரு!
அப்போதுதான் நீ ஆதாரப் பூர்வமானவராக பொறுப்புள்ளவராக
உண்மையாக இருக்க முடியும்!
--ஓஷோ


அமைதி இல்லாதவனுக்கு இன்பம் இல்லை.
--கீதை

முழுக்க முழுக்க சர்க்கதையாக
இருந்து விடாதே.
உலகம் உன்னை விழுங்கிவிடும்!
முழுக்க முழுக்க எட்டிக்காயாக
இருந்து விடாதே.
உலகம் உன்னை உமிழ்ந்துவிடும்!
--பாரசீகப் பழமொழி



வெற்றி என்பது முடிவல்ல.
அது ஒரு தொடர் பயணம்!




9 comments:

Unknown said...

super thala

Lingesh said...

Thank you Mohandivya.

மாலதி said...

பொறுமையாக இருந்தால்
தண்ணீரைக் கூட
சல்லடையில் அள்ளலாம்.
ஆனால் அது உறையும் வரை
காத்திருக்க வேண்டும்!//

சிறந்த தன்னம்பிக்கை நிறைந்த வரிகள் இன்று தன்னம்பிக்கை யுத்தி கிறவர்களே இல்லை எனலாம் சிறப்பான கருத்தை பதிவு செய்துள்ளீர் பாராட்டுகள் .

Lingesh said...

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி மாலதி அவர்களே...

ராஜி said...

ஜெயிக்கறதுக்குப் பேர் காதல் இல்லை. மதிக்கறதுக்குப் பேர் தான் காதல்.
--பாலகுமாரன்
>>
மிகச்சரியான வரிகள் சகோ

ராஜி said...

ஒன்றைச் செய்ய விரும்பினால் வழியைக் கண்டறிகிறாய். செய்யாமல் இருக்க விரும்பினால் காரணங்களைக் கண்டுபிடிக்கிறாய்\
>>>
இது என்னை பற்றி சொன்னது போல் இருக்கே

ராஜி said...

த ம 3

Lingesh said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஓட்டுக்கும் நன்றி சகோதரி ராஜி.

Lingesh said...

ராஜி said...
ஒன்றைச் செய்ய விரும்பினால் வழியைக் கண்டறிகிறாய். செய்யாமல் இருக்க விரும்பினால் காரணங்களைக் கண்டுபிடிக்கிறாய்\
>>>
இது என்னை பற்றி சொன்னது போல் இருக்கே
>>>

உங்களது பதிவுளைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே...

Post a Comment