படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Thursday, November 3, 2011

இழப்பதென்பது ஒரு தொடர்கதையோ?



கருப்பையைத் தொலைத்து குழந்தையானேன்
குழந்தையைத் தொலைத்து சிறுவனானேன்
சிறுவனைத் தொலைத்து இளைஞனானேன்
இதயத்தைத் தொலைத்து காதலனானேன்
காதலைத் தொலைத்து கவிஞனானேன்
இளைஞனைத் தொலைத்து கணவனானேன்
காலத்தைத் தொலைத்து முதியவனானேன்
உயிரைத் தொலைத்து கல்லறையானேன்

இழப்பதென்பது ஒரு தொடர்கதையோ?

11 comments:

rajamelaiyur said...

//காலத்தைத் தொலைத்து முதியவனானேன்
உயிரைத் தொலைத்து கல்லறையானேன்

இழப்பதென்பது ஒரு தொடர்கதையோ?
//
கேள்விக்கு யார் பதில் சொல்வது ?

rajamelaiyur said...

இன்று என் வலையில்


தலை, தளபதி மற்றும் புத்தர்

Lingesh said...

நன்றி "என் ராஜபாட்டை"- ராஜா அவர்களே

Anonymous said...

kaalathin kattaayam...

ungal thorttathai pin thirumbi paarungal..

intha thorttamum azhagum oru naal pokkisamagalam..

Lingesh said...

Unmai Anonymous nanbare.... Nanri...

சி.பி.செந்தில்குமார் said...

இழப்பதென்பது ஒரு தொடர்கதையோ?
>>>
ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை பெற முடியும்

நம்பிக்கைபாண்டியன் said...

தலைப்புக்கேற்ற நல்ல கவிதை!

Lingesh said...

//ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை பெற முடியும் // --> மிகச்சரியே. நன்றி சிபி அவர்களே.

Lingesh said...

தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நம்பிக்கைபாண்டியன் அவர்களே...

Unknown said...

திறந்த கண்களும்…
பரந்த பார்வையும்…
உரத்த நோக்கும்
அல்ல விழிப்பு,

பிறர் வலி உணர்தலும்…
உணர்ந்து நீக்கலும்…
நீக்கி இருத்தலுமே
விழிப்பு!

காண்பதும்…
கேட்பதும்…
நுகர்தலும்…
மூச்சிழுத்து விடுவதும்
அல்ல வாழ்க்கை

நினைப்பதும்…
செய்வதும்…
செய்ததை உலகம்
நினைத்திருக்கச் செய்வதுமே
வாழ்க்கை!

உயிர் கழிதலும்…
உணர்வழிதலும்…
மெய் வீழ்தலும்…
அல்ல மரணம்,

உயிர்களுக்கு உதவாமல்…
இல்லாமலிருத்தல்போல்…
இருப்பதே…
மரணம்!

தெரியாதவை தெரிதலும்…
புரியாதவை புரிதலும்…
விளங்காதவை விளங்கலும்…
அல்ல ஞானம்,

தெரிந்ததை தெரிவித்தலும்…
புரிந்ததை புரியவைத்தலும்.
விளங்கியதை விளக்குவதுமே…
ஞானம்!

மயக்கம் தெளி,
யதார்த்தம் அறி!

Unknown said...

திறந்த கண்களும்…
பரந்த பார்வையும்…
உரத்த நோக்கும்
அல்ல விழிப்பு,

பிறர் வலி உணர்தலும்…
உணர்ந்து நீக்கலும்…
நீக்கி இருத்தலுமே
விழிப்பு!

காண்பதும்…
கேட்பதும்…
நுகர்தலும்…
மூச்சிழுத்து விடுவதும்
அல்ல வாழ்க்கை

நினைப்பதும்…
செய்வதும்…
செய்ததை உலகம்
நினைத்திருக்கச் செய்வதுமே
வாழ்க்கை!

உயிர் கழிதலும்…
உணர்வழிதலும்…
மெய் வீழ்தலும்…
அல்ல மரணம்,

உயிர்களுக்கு உதவாமல்…
இல்லாமலிருத்தல்போல்…
இருப்பதே…
மரணம்!

தெரியாதவை தெரிதலும்…
புரியாதவை புரிதலும்…
விளங்காதவை விளங்கலும்…
அல்ல ஞானம்,

தெரிந்ததை தெரிவித்தலும்…
புரிந்ததை புரியவைத்தலும்.
விளங்கியதை விளக்குவதுமே…
ஞானம்!

மயக்கம் தெளி,
யதார்த்தம் அறி!

Post a Comment