படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Wednesday, November 16, 2011

நாட்டு நடப்பு - 2 (ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?)

திங்கள் அன்று காலை சென்னைக்கு ஆம்னி பேருந்தில் வந்தேன். பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகே நிற்காமல் ஆம்னி பேருந்து நிலையத்தினுள் வந்து நின்றது. என் முன்னால் இறங்குவதற்கு நின்ற நபருக்கு அங்கிருந்து அதிக தூரம் நடக்க வேண்டும் என்பதால் பெருங்கோபம் வந்துவிட்டது. ஓட்டுநரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் இறங்கிவிட்டார். ஓட்டுநரும் இன்று ஒருவன் சிக்கிட்டான்யா என்ற தோரனையில் அந்த நபருடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். இதன் முடிவில் ஓட்டுநர் கண்டுபிடித்த விசயம் என்ன என்றால் "சட்டம் அனைவருக்கும் பொது". என்ன கொடுமை பார்தீங்களா? சட்டத்தைப்பற்றி யார் யாரெல்லாம் பேசுவது....

நான் தங்கியிருக்கும் இடத்திற்கு வர கோயம்பேட்டில் ஒரு பேருந்தில் ஏறினேன். அதிகாலையிலேயே அதிக மக்கள் உள்ளிருந்தனர். இரண்டு கையுடமைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு ஏறி ஒரு இருக்கையின் அருகே நின்றேன். அந்த இருக்கையில் அமர்ந்திருந்த யுவதி உடனடியாக என்னிடம் இருந்த மடிக்கணிணியை வாங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார். அவரின் செயல் அந்த கூட்டத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு முன்னர் நின்றவர்களை நேட்டம்விட்டேன். எனக்கு மிக அருகில் நின்றவர்களில் இருவர் மடிக்கணிணி வைத்துக்கொண்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். அந்த யுவதி எனக்கு மட்டும் ஏன் உதவ வேண்டும்? ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

அலுவலகங்களில் வேலை செய்யும் பெரும்பாலான பெண்கள் (நான் அனைவரும் என்று கூறவில்லை) அலுவலகத்திற்கு வந்தவுடன் துப்பட்டாவை கழட்டி வைத்துவிடுகிறார்கள். வீட்டிற்குச்செல்லும் முன் அணிந்து கொள்கின்றனர். அலுவலக்தில் ஏற்ககுறைய ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு பேர் இருக்கின்றனர். ஆனால் பேருந்தில் வீட்டிற்குச் செல்லும் வழியில் அதிகபட்சம் சுமார் ஐநூறு பேரைத்தான் கடந்து செல்லவேண்டியிருக்கும். பிறகு ஏன் இப்படி என்று புரியாமல் என்னுடன் பணிபுரியும் நண்பரிடம் கேட்டதற்கு உமக்கு வயசாகிவிட்டது, வயதுக்கு தகுந்த ஆராய்ச்சியை மட்டும் செய்யும் என்றார். ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

3 comments:

ADMIN said...

ஹா...ஹா.. எனக்கும் தெரியாது..!!!


நேரமிருக்கும்போது இங்கேயும் வருகை தர அன்புடன் அழைக்கிறேன்..



எனது வலையில்

வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்

உங்கள் internet speed உடனடியாக தெரிந்துகொள்ள

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

ADMIN said...

நல்ல பல இடுகைகளை இங்கு காண முடிகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி..!!

Lingesh said...

முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தங்கம்பழனி அவர்களே...

Post a Comment