ஆண்களைப் பொறுத்தவரை காதலி மிகவும் புத்திசாலியாகவும் மனைவி முட்டாளாகவும் இருக்க விரும்புவர்.
டீனேஜ் வயதினருக்குப் பிடிக்காத வாக்கியம் / அறிவுரை - "பருவத்தில் பன்னி குட்டி கூட அழகாக இருக்கும்". என் பதின்ம வயதில் எனக்கு சொல்லப்பட்ட அறிவுரை.
அப்பெண் என்னை காதலிப்பதாக என் தோழி மூலம் அறிய நேர்ந்தது. பல வருடங்களாக நல்ல நண்பராகத்தான் அப்பெண் எனக்கு இருந்துள்ளார். பல காரணங்களால் என்னால் அக்காதலை ஏற்ற முடியவில்லை என்று கூறிய பின் என்னுடன் பேசுவதை முற்றிலும் தவிர்த்துவிட்டார். நானும் கட்டாயப்படுத்தவில்லை. நட்புக்கு அடுத்த நிலைதானே காதல். அக்காதல் கைகூடாதபோது நட்பை ஏன் தொடர முடிவதில்லை?
இந்தியா ஊழல் நாடு லஞ்சத்தை ஒழிக்கவேண்டும் என்று முழங்கும் நாம், நம் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் வாங்கும் போது தரும் கையூட்டை வசதியாய் மறந்துவிடுகிறோம். ஏன்?
2 comments:
அழகாக சொன்னீர்கள் அண்ணா!! ஒரு சிறு பதிவில் எத்துனை கருத்துக்கள்? அருமை, அருமை!! - செந்தில் பத்திரப்பன்
நன்றி செந்தில்.
Post a Comment