எப்பொழுது தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை நிறுத்தினேன் என்று தெரியவில்லை. சிறு வயதுகளில் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னமே அட்டவணை தயாரித்து அப்பாவின் சம்பளம் அல்லது போனஸ் பணம் வந்தவுடன் பட்டாசுகளை வாங்கி வந்து தங்கையுடன் சண்டையிட்டு பங்கு பிரித்து கொண்டு அதை தினமும் எடுத்துப் பார்த்துக்கொண்டு தீபாவளி வரும் நாளுக்காக ஏங்கிக்கொண்டிருந்த காலங்கள் இப்பொழுது இல்லை. அத்தனை ஆர்வங்களும் சட்டென மறைந்து விட்டது. எத்தகைய அபாயகரமாண வெடியையும் கையில் பிடித்துவெடித்த லாவகம் இப்பொழுது மற்றவர்கள் வெடிப்பதை பார்ப்பதே கொஞ்சம் பயமாகவும் மாறிவிட்டது. முன்பெல்லாம் பண்டிகைக்கு அடுத்தநாள் கூட்டி ஒதுக்கிவைத்திருக்கும் பட்டாசு குப்பைகளின் குவியலைப்பார்க்கும் போது ஏற்பட்ட ஒருவித கர்வம், சந்தோஷம் இப்பொழுது எரிச்சலாக மாறிவிட்டது. எதற்கு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கரியாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்குகிறது. பட்டாசு வெடிப்பதற்குப்பதில் ஒரு தீபத்தை ஏற்றி வழிபடலாம். சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் கேடு பெருமளவு குறையும்.
தற்பொழுது அனைத்து பண்டிகைகளும் கமர்ஷியல் எனப்படும் வணிக மாய வலைக்குள் சிக்கி அதன் சுயத்தை இழந்துவிட்டது என்பது என் தனிப்பட்ட கருத்து. அதனாலேயே பண்டிகையின் மேல் இயல்பாய் ஏற்படக்கூடிய ஈர்ப்பு வராமலேயே போய்விட்டது.
முன்பெல்லாம் காலையில் குளித்து முடித்தவுடன் அம்மா ஒரு கட்டு லட்சுமி வெடியை கொடுத்து சாங்கியத்திற்காகவாவது வெடி என்று கூறுவார்கள். இப்பொழுதெல்லாம் அந்த வற்புறுத்துதல் கூட குறைந்து விட்டது.
பண்டிகையின் மேல் நமது தொலைக்காட்சிகளுக்கு இருக்கும் பொறுப்பும் அக்கறையும் நம்மை புல்லரிக்க வைக்கின்றது. ஒரு பட்டிமன்றம், இரண்டு திரைப்படம், கலைக் கூத்தாடிகளின் பேட்டி என்று இவர்கள் சம்மந்தப்படுத்தும் விசயங்கள் அந்த பண்டிகையின் பெருமைக்கு எவ்விதத்திலும் துணைபுரியப் போவதில்லை.
உறவினர்களின் வருகை கூட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் குறைந்து விட்டது. பிறகெப்படி அடுத்த தலைமுறைக்கு நாம் இந்த பண்டிகையின் அருமை பெருமை மற்றும் வரலாற்றை கொண்டு போகப்போகிறோம்.
8 comments:
Feelings :)
ஆம் ரமேஷ்.
Muzhuka Muzhuka unmai but ninaikum pozhuthu oru aadhangam naamum ithai thaan pinpaduthugiromae endru, oru puratchi vendum, kandipaga, satru munbu naan keta oru vari, uravugal enna oorugaigala? vendumn endra pozhuthu eduthukolvatharku, athu pandigaikalukum porumnthum but puratchi vendum nanbare.
Thank you Senthil for your comments. We need the relatives, friends all the time but when they come home during the festivals, it makes the situation more happy.
இப்பொழுதெல்லாம் எந்த பண்டிகை என்றாலும், காலை எழுந்தவுடன் தொலைககாட்சி முன் அமர்ந்து நடிக/நடிகையரின் பேட்டி, பட்டிமன்றம், திரைப்படம் என்று ஒரே மாதிரியாகிவிட்டது. இளைய தலைமுறைக்கு பண்டிகைகளைப் பற்றியும் அதை எப்ப்டி கொண்டாடுவது என்பதைப் ப்ற்றியும் தெரிவதில்லை.
தங்கள் கவலை மிகச் சரியானதே!
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி வேங்கட ஸ்ரீனிவாசன் அவர்களே. நம் குழந்தைகளுக்கு பண்டிகைகளின் கொண்டாட்டங்களை சொல்லி வளர்த்தால் போதும். அடுத்த தலைமுறைக்கு தானாவே சென்றுவிடும்.
frankly told Lingesh!! well written :)
Thank you Arasu.
Post a Comment