படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Monday, May 24, 2010

ஒரு சிறிய நினைவுகூறல்

புரியாமலும், தெரியாமலும், பல சமயங்களில் அறியாமலுமே நாம் சில தவறுகளை செய்துவருகிறோம்.

அது 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம். நான் கல்லூரி படிப்பின் இறுதியாண்டில் பெங்களூரு நகரத்தில் ஆறு நண்பர்களுடன் ஒரு சிறு வீட்டில் தங்கி கணிப்பொறி துறையில் வேலை தேடி அலைந்து திரிந்து கொண்டு படிப்பிற்கான பிராஜக்ட் (ஒரு நிறுவனத்தில் சம்பளம் எதுவும் இன்றி) செய்துகொண்டிருந்த காலகட்டம். அப்பா மாதம் தோறும் அவரால் முடிந்த ஒரு சிறு தொகையை என் செலவுக்காக எனது வங்கி கணக்கில் செலுத்திவிடுவார். அந்த மாதம் என் பிராஜக்ட் ரிப்போர்ட்டை கல்லூரியில் முடிக்க (submit) வேண்டியிருந்ததால் அப்பா அனுப்பிய பணம் பிராஜக்ட் ரிப்போர்ட் தயாரிக்கவே செலவாகிவிட்டது. என்னுடன் தங்கியிருந்த நண்பர்களின் நிலையும் அதுவே. மாத முதல் வாரத்தில் தினம் உண்ட மூன்று வேளை உணவு அடுத்த வரத்தில் இரண்டு வேளையும் அதற்கடுத்த வராத்தில் ஒரு வேளையாகவும் குறைந்துவிட்டது. அம்மாதம் 26 ஆம் நாள் காலையில் கையில் ஒருவரிடமும் ஒரு பைசா காசு கிடையாது. வீட்டின் சமையல் அறையில் சமயல் எண்ணெய், உப்பு மற்றும் மிளகாய் தவிர வேறு எதுவும் இல்லை. மீதமிருந்த பருப்பு வகைகளைக் கூட முன்றைய நாட்களில் வேகவைத்து உண்டாகிவிட்டது. பேருந்திற்கான மாதாந்திர பயணச்சீட்டு இருந்ததினால் போக்குவரத்திற்கு சிரமம் இல்லை. இதே நிலை 27 மற்றும் 28 ம் தேதிகளிலும் தொடர்ந்தது. சில நண்பர்கள் அலுவலக்தில் தரும் காபி, தேநீர் உதவியுடன் சற்று மனம் தளராமல் இருந்தனர். இவற்றை அருந்தும் பழக்கமில்லா என் நிலை சற்று கவலை தான். 28 ஆம் தேதி மதியத்திற்கு மேல் என்னால் அலுவலக்தில் இருக்கமுடியாமல் மற்றொரு அறை நண்பருடன் வீட்டிற்கு திரும்பும் வழியில் நான் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையம் கண்ணில் பட்டது. என் கணக்கில் 50 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது என்று நினைவு. இருந்தாலும் என் கணக்கு அட்டையை சொருகி இருப்பைப் பார்த்த போது 100 ரூபாய்க்கு மேல் காட்டியது (உபையம் வங்கியின் அரையாண்டு வட்டி பற்று). உடனடியாக 100 ரூபாயை எடுத்துக்கொண்டு அரிசி, பருப்பு, காய்கறிகள் வாங்கி சமைத்து மற்ற நண்பர்கள் வரும் வரையில் நாங்கள் இருவரும் காத்திருந்தோம்.

மூன்று நாட்கள் பட்டினி. கண்முன்னே சமைத்த சாப்பாடு (சாதம், சாம்பார், ரசம் மற்றும் கடையில் வாங்கிய தயிர்). இருந்தாலும் நண்பர்களுக்காக காத்திருப்பது என்று முடிவெடுத்தோம். (நாங்கள் இருவரும் சாப்பிட முடிவெடுத்திருந்தால் மற்ற நால்வருக்கும் எதுவும் மிஞ்சியிருக்காது என்பது வேறு விசயம்).

இதை சற்றும் எதிர்பாராத நண்பர்கள் வழக்கம்போல தாமதமாகத்தான் வந்தார்கள். (அலைபேசி இல்லாததால் தகவல் சொல்ல முடியவில்லை).

அவர்கள் வரும் வரை உள்ள நேரம் என் வாழ்வில் மிகமுக்கியமானது. எனக்கு பலவற்றைக் கற்றுக்கொடுத்தது. முதல் வரியில் குறிப்பிட்டது போல பல அறியாமைகளை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

ஒவ்வெருவராக வீட்டிற்குள் நுழைந்த போது அவர்களின் முகங்களில் தோன்றி உணர்ச்சிகள். நிச்சயம் என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. எங்கள் வாழ்வின் அந்த மூன்று நாட்கள் கற்றுக்கொடுத்தது ஏராளம். அன்று இரவு எங்கள் அனைவருக்கும் 100 ரூபாயின் அருமையும் பசியின் கொடுமையும் புரிந்தது.

அன்று முதல் ஒரு பருக்கை உணவைக் கூட வீணடிப்பதில்லை என்ற உறுதியுடன் இன்று வரை இருக்கிறேன். நீங்கள் எப்படி?

Thursday, May 6, 2010

இட ஒதுக்கீடும் இயலாமையும்






ஒரு குத்துச்சண்டை வீரனுக்கு உடல் வலிமை மிகமுக்கியம். எதிராளியின் அடியைத்தாங்கும் உடல் வலிமையும் திருப்பி அடிக்கும் சக்தியும் அவனுக்கு அவசியம். இவைகள் அடிப்படை தகுதிகள் என்று மட்டுமே சொல்லலாம். மற்ற அனைத்து தகுதிகளும் (புத்திக்கூர்மை, விடாமுயற்ச்சி, சாதூர்யம், அதிர்ஷ்டம், போன்றவைகள்) இந்த அடிப்படையைத் தாண்டியே அமைகிறது.

ஒரு ஓட்டப்பந்தைய வீரனுக்கு பலமிக்க கால்கள் அவசியம். பொதுவாக நம் அனைவருக்கும் கால்கள் என்பது உண்டு. நன்றாக ஓடவும் முடியும். ஆனால் நம்மால் ஒரு ஓட்டப்பந்தையத்தில் வெற்றி பெற முடியுமா என்றால் சங்கடமான பதில் வரும்.

சாதாரண கால்களை ஒருவன் மிகச்சிறந்த பயிற்சியின் மூலம் பலமிக்கதாக மாற்றிக் கொள்ள முடியும். ஒரே சீரான சிறந்த பயிற்சியினை அனைவருக்கும் அளித்தாலும் அது ஒவ்வொருவரின் உடல் மற்றும் மனதைப் பொறுத்தே ஏற்றுக்கொள்ளப்படும்.

போராடத் துணிந்த, திறமையான, சுறு சுறுப்பான, தெளிவான சிந்தனையுடைய, உடல் வலிமையான, ஆரோக்கியமான, மன உறுதியுடைய, நேரத்தின் அருமையுனர்ந்த, பொறுப்பான குடிமக்கள்கள் ஒரு நாட்டிற்கு மிக அவசியம். அவர்களால்தான் ஒரு நாட்டை சீரான முன்றேற்றப்பாதையில் அழைத்துச் செல்லமுடியும்.

ஒரு நாட்டின் முன்றேற்றம் என்பது அந்நாட்டில் உள்ள அனைத்து தர மக்களின் முன்னேற்றத்தில்தான் ஏற்படவேண்டும். சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். நமக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதே நேரத்தில் வேகமாக முன்னேறும் ஒருவனுக்கு தடை ஏற்படுத்திவிடக் கூடாது.

ஒரு பெரிய அணையைக் கட்டும்போது அல்லது ஒரு செயற்கைக்கோளை வடிவமைக்கும் போது அல்லது ஒரு சிக்கலான நுட்பமான மருத்துவ அறுவைச் சிகிச்சையின் போது, நாம் அனைவரும் எதிர்பார்ப்பது மற்றும் ஒத்துக்கொள்ளக் கூடியது அவைகளின் தரம். தரமான ஒரு வேலையை நிச்சயம் திறமையான ஒருவரால் அல்லது ஒரு திறமையான குழுவால் தரமுடியும்.

புரியும் படியே சொல்கிறேன். ஒரு பள்ளி வகுப்பில் முப்பது மாணவர்கள் படிக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள். அனைவரும் முதல் மதிப்பெண் வாங்குவதில்லை. பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் முதல் மாணவனுக்கும் கடைசி மாணவனுக்கும் ஒருவரே. நம் அரசாங்கம் ஒரு மாணவனை இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஒரு வகுப்பறைக்குள் அனுமதிப்பதுடன் ஒதுங்கிக்கொள்கிறது. திறமையில்லாமல் ஒருவன் இட ஒதுக்கீட்டின் உதவியுன் வகுப்பில் நுழையும் போது அவனால் மற்ற திறமைசாலிகளுடன் போட்டியிட முடியால் தவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அரசாங்கம் இதை தவிர்க்க எந்ந முயற்சியையும் கடந்த அறுபது ஆண்டுகளில் செய்யவில்லை.

ஒருவனின் திறமை மேம்பட பல்வேறு சுற்றுப்புற காரணிகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதை தவிர்த்து வெறுமனே பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ ஒரு இடத்தை அவனுக்குக் கொடுப்பதனால் நாம் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியாது.

மருத்துவத்துறையில் அல்லது பொறியியல் துறையில் இட ஒதுக்கீட்டின் மூலம் நுழையும் தகுதியற்ற ஒருவனால் அவனுக்கும் நம் நாட்டிற்கும் எத்தகைய நன்மையும் ஏற்படப்போவதில்லை. மாறாக ஒரு திறமையான மாணவனின் கல்விக் கனவை இது சிதைத்துவிடுகிறது. எத்தகைய பிரிவைச் சார்ந்த திறமையான மாணவர்களுக்கு எப்போதும் இட ஒதுக்கீடு தேவையே இல்லை.

ஒவ்வொருவருக்கும் சாதி மத மொழி இன பேதங்கள் கடந்து பல பல திறமைகள் உள்ளன. ஒருவனின் திறமைக்கும் தகுதிக்கும் கடின உழைப்புக்கும் உரிய கல்வியும் வேலை வாய்ப்பும் கிடைக்க வேண்டுமே ஒழிய அவனது ஜாதி மத மொழி அடிப்படையில் கிடைக்கக் கூடாது.

தற்பொழுது இட ஒதுக்கீடு என்பது கல்வி, வேலைவாய்ப்பு, பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் கட்டாயமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மகளிர் இட ஒதுக்கீடு என்பதும் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளது.

இட ஒதுக்கீடு இல்லாமல் நம்நாட்டில் பெருவாரியாக உள்ள பின் தங்கிய மக்களை எப்படி முன்னேற்ற முடியும் என்பது நியாயமான கேள்வி. என்னைப் பொறுத்த வரை ஜாதி மதங்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது.

தற்பொழுது நம்நாட்டில் 6 முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் சமச்சீர் கல்வி முறையையும் தமிழ்நாடு அரசு விரைவில் அமுல்படுத்த உள்ளது. நாட்டில் உள்ள மக்களை பொருளாதாரத்தில் மிக முன்னேறிய, முன்னேறிய, பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய என்று நான்கு வகைகளாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். முதலில் இந்த நான்கு பிரிவுகளில் அனைத்து ஆரம்பப் பள்ளி மாணவர்களை வகைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆரம்பக்கல்வி (ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை) கற்கும் பொழுது மாணவர்களை மிக மோசம், மோசம், சுமார், நன்று, மிக நன்று என்று தரம் பிரித்துக்கொள்ள வேண்டும். நன்று மற்றும் மிக நன்று பிரிவுகளில் உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அதிக அக்கரை செலுத்தவேண்டியதில்லை. ஆனால் மிக மோசம் மற்றும் மோசம் என்ற பிரிவுகளில் உள்ளவர்கள் விரைவில் படிப்பை கைவிடும் சாத்தியம் அதிகம். இப்பிரிவில் உள்ளவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப குறைகள் மற்றும் பிரச்சணைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் கூடுதல் கவனம் கொண்டு அவற்றைக் களைந்தால் அவர்களை ஆரம்பப் படிப்பு முடியும் தருவாயில் சுமார் பிரிவுற்குள் நகர்த்திக்கொண்டுவர முடியும். அரசாங்கம் அதிக அளவு நிதி மற்றும் திட்டங்களை இதற்குத் தயாரிப்பது அவசியம். ஆரம்பப் படிப்பு முடிந்தவுடன் உயர் நிலைக் கல்வியில் (ஆறு முதல் பத்து வகுப்பு வரை) மீண்டும் இதே போன்று வகைப்படுத்திகொண்டு செயல்பட்டால் மிக மோசம் மற்றும் மோசம் என்ற வகையில் உள்ள மாணவர்களை மேம்படுத்திவிட முடியும். மேல்நிலை வகுப்புகளுக்கு ஒருவன் வரும் போது அவன் நிறை குறைகள் ஆசிரியர்களிடமும் அம்மாணவர்களிடமும் தெளிவாக இருக்கும். அவன் திறமை மற்றும் தகுதிக்கேற்ப துறைகளை தெளிவாக தேர்ந்தெடுக்க உதவும்.

கல்வி நிறுவனங்கள் வர்த்தக நோக்கில் இல்லாமல் சேவை நோக்கில் செயல்படும்போது இது நிச்சயம் சாத்தியமாகும்.

எந்த ஒரு உயர் கல்வியிலும் (கல்லூரி பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளில்) ஒருவன் சேர அவனது திறமையை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அரசு இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை முழுவதும் அம்மாணவரையே சேர வேண்டும். முன்னேறிய குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் 25% அரசு மானியம் தரலாம். பின்தங்கிய குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் 50% முதல் 75% அரசு மானியம் தரலாம். மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளலாம். மேலும் அரசு மாணவர்களுக்கு கல்விக் கடன் தடையின்றி சரியான நேரத்தில் கிடைக்க உத்திரவிட்டு கண்காணிக்க வேண்டும்.


கடந்த வாரங்களில் நாளிதழ்களில் வெளியான ஒரு செய்தி என்னை மிகவும் வருத்தமடையச் செய்துவிட்டது. அதாவது நமது அரசு பொறியியல் கல்வியில் சேர உள்ள குறைந்தபட்ட மதிப்பெண்னை 50% ஆக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது திறமையற்ற பொறியியல் வல்லுநர்களை அதிக அளிவில் அல்லவா உற்பத்தி செய்துவிடும்.

அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அனைவரும் தரமான கல்வி கற்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதைத் தர வேண்டியது அரசு மற்றும் கல்வி நிலையங்களின் கடமையும் கூட.

தரமான கல்வியினால் ஒரு தரமான சமுதாயத்தை உருவாக்க முடியும். ஒரு தரமான சமுதாயத்தால் நிச்சயம் ஒரு தரமான முன்னேறிய நாட்டை உருவாக்க முடியும்.

கல்வியில் மட்டுமல்ல இந்த நிலை. அரசாங்க வேலை வாய்ப்புகளும் அரசுத் துறைகளும் தற்பொழுதுள்ள இடஒதுக்கீட்டு முறையினால் பாழ்பட்டுக்கிடக்கிறது. திறமையான ஒருவனிடம் ஒப்படைக்கப்படும் ஒரு வேலை நிச்சயம் திறமையாக செய்து முடிக்கப்படும். செலவு செய்யப்பட்ட நேரமும் பணமும் நிச்சயம் வீண்போகாது. திறமையற்றவன் இடஒதுக்கீட்டின் மூலம் பெற்ற வேலையில் தரம் எப்படி இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

நமக்கு உடனடித் தேவை முடியும் என்ற முயற்சியும் சுறு சுறுப்பான உழைப்பும் மாறுபட்ட சிந்தனையுமே தவிர, வேண்டாம் இந்த பழாய்ப் போன ஓட்டுச் சார்ந்த இட ஒதுக்கீடு முறை.



குறிப்பு: உங்களுடைய கருத்துக்களை தவறாமல் பின்னூட்டத்தில் பதியவும்.

Monday, February 8, 2010

கனவே கலையாதே!

அமெரிக்காவில் இருந்து இன்று தான் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கி என் உடமைகளை அள்ளிக்கொண்டு வெளியே வந்தேன். வரிசையாக நின்றிருந்த ஆட்டோக்களில் முதலில் நின்றிருந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்த உடன் ஓட்டுநர் எங்கு செல்லவேண்டும் என்று கேட்டார். நான் சொன்னவுடன் மீட்டரைப்போட்டு ஆட்டோவை செலுத்தினார். சென்னை ஆட்டோவில் மீட்டரா? ஆச்சர்யம் விலகுவதற்குள் விமான நிலையம் கடந்து சாலையில் பயணம் தொடர்ந்தது. சாலையில் இருபுறங்களிலும் உயர்ந்து வளர்ந்த மரங்களுக்கு இடையிடையே அழகுச்செடிகள். காலை நேரத்து மெல்லியத் தென்றல் என் முகத்தில் பட்டு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. எங்கே போயின சாலையோரக் கடைகள்? மக்கள் நடப்பதற்கும் மிதிவண்டிப் பயணங்களுக்கும் வழிவிட்டுச் சென்றுவிட்டதோ? யோசனையுடன் முன்பக்க சாலையைப் பார்க்கும் போது சிவப்பு விளக்கிற்காக வண்டிகள் நின்றன. பக்கவாட்டுச் சாலையில் உள்ள வாகனங்கள் பச்சை விளக்கு எரிந்தவுடன் வரிசையாகச் சென்றன. வாகனங்களில் இருந்து வெளியேரும் கரும்புகையும் இரைச்சலும் வெகுவாக குறைந்திருப்பதாக உணர்கிறேன். ஓட்டுநர் என் எண்ணத்தை களைத்தார். அவர் ஒரு பட்டதாரி என்றும் இது அவரின் சொந்த வாகனம் என்றும் தற்பொழுதெல்லாம் நிம்மதியாக தொழில் செய்ய முடிவதாகவும் வருமானம் திருப்தியளிப்பதாகவும் கூறிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டே என் தேடலைத் தொடர்ந்தேன். அடுத்த சிவப்பு விளக்கிலும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இடம் வந்தவுடன் இறங்கி மீட்டர் காட்டிய தொகையை தந்து விட்டு "வழியில் ஒரு போக்குவரத்து காலவரையும் காணோமே" என்ற என் சந்தேகத்தை அவரிடம் கேட்டேன். திடீரென்று குலுங்கி நின்ற ஆட்டோ என் தூக்கத்தை கலைத்தது. சார் வழியில் அரசியல் ஊர்வலம். இதற்குமேல் போகமுடியாது இறங்கி நடந்து செல்லுங்கள் என்று கூறினார் ஓட்டுநர்.

என்னால் கனவென்று ஒதுக்கவோ ஒதுங்கவோ முடியவில்லை. எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தையும் குறை கூறிக்கொள்ளும் நாம்மால் எதுவும் செய்ய முடியாதா?

சுய ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு, கல்வி, உழைப்பு தான் ஒரு குடும்பத்திலும் பின் சமுதாயத்திலும் பின் ஒரு நாட்டிலும் பிரதிபலிக்கிறது. என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான சக மனிதர்களின் ஒழுக்கமும், கட்டுப்பாடும், நேர்மையும் தான் அம் மக்களை ஆளுபவர்களின் மூலம் வெளிப்படுகிறது. தனி மனிதனிடம் ஏற்படாத எந்த மாற்றமும் சமுதாயத்திலும் சரி நம்மை ஆள்பவர்களிடமும் சரி ஏற்பட வாய்ப்பே இல்லை. நம் தவறுகளையும் பிழைகளையும் அடுத்தவர் மேல் சுமத்தி பழக்கப்பட்டு வளர்ந்த நமக்கு இது உறைக்க சில காலங்கள் அல்லது சில பல தலைமுறைகள் கூட ஆகலாம்.

அசிங்கத்தை நடுவீட்டில் வைத்துவிட்டு நாறுகிறது குமட்டுகிறது என்பது போல் அல்லவா இருக்கிறது அரசியல்வாதிகளை விமர்சிப்பது. எதை எங்கு வைக்கவேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்கிறோம். மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு நடத்தப்படுவதே நம் குடியரசு. நாமும் நம் மக்களும் பிச்சைக்காரர்களாக மாறியிருப்பதற்கு (இலவசங்களை சொல்கிறேன்) நாம் தான் காரணம். பிச்சைக்காரர்கள் இருக்கும் வரை இத்தகைய ஈகை உள்ளங்கள் (அரசியல்வாதிகள்) திருந்தப்போவதில்லை.

நான் இதுவரை மற்றவர்களை பாதிக்கும் ஒரு பொய் கூட சொன்னது இல்லை, ஒரு முறை கூட வாக்களிக்கத் தவறியதே இல்லை, லஞ்சம் கொடுத்ததில்லை, அரசாங்கத்தையும் சட்டத்தையும் ஒரு பொழுதும் ஏய்த்தது அல்லது ஏமாற்றியது இல்லை என்று உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். நான் யாரையும் குறைசொல்ல வரவில்லை. நான் சொல்ல வருவது என்னவென்றால் எல்லாத் தவறுகளையும் நியாயப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதே.

ஒரு பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு ஐந்து லட்சங்கள் வரை செலவு செய்யும் ஒருவரிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? பணியில் சேர பத்து லட்சங்கள் வரை செலவு செய்யும் ஒரு அரசு ஊழியரின் லஞ்சத்தை எப்படி ஒழிக்க முடியும்? பள்ளியில் நம் குழந்தைகளின் எல்.கே.ஜி. சேர்க்கைக்கு எழுபத்து ஐந்தாயிரம் ரூபாய் வரை நன்கொடை (லஞ்சத்தின் மறுபெயர்) அளிக்க முன்வரும் நம்மிடம் எங்கே நேர்மை?

தனி மனித ஒழுக்கத்தையும் நேர்மையையும் கட்டுப்பாட்டையும் கல்வியையும் விதைப்பதில் பெரும் பங்கு நம் கல்விக் கூடங்களுக்கு உண்டு. இன்று அவைகளின் சேவையும் நேர்மையும் கட்டுப்பாடுமே தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகிய பிறகு விவாதத்திற்கு உட்பட்டதாகிவிட்டது.

நான் எல்லா தனியார் பள்ளிகளையும் குறை கூறவில்லை. எங்கு அரசு நிர்ணயத்துள்ள கட்டணங்களில் தரமான கல்வி கிடைக்கிறதோ அவைகளை நாம் கட்டயாம் அங்கீகரிக்க வேண்டும்.

கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளில் தான் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருத்து விட்டன. இவற்றில் பல, சேவையை மறந்து பணம் சம்பாதிக்கும் தொழில் நிறுவனங்களாக உருமாறிவிட்டன. இவைகளின் கவர்ச்சி விளம்பரங்களில் நாம் மயங்கி வியாபாரத்திற்கு துணைபோய்விட்டோம். மக்களின் ஆதரவையும் அரசாங்கத்தின் ஆதரவையையும் இழந்து இன்று அரசு பள்ளிகள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. "மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது" என்பது பழமொழி. அரசாங்கப் பள்ளிகளில் மட்டுமே படித்த நம்மில் பலர் இன்று நல்ல நிலைமைகளில் தான் உள்ளோம். அரசாங்கப்பள்ளி என்னும் மாடு வேண்டுமானால் இன்று இளைத்திருக்கலாம் ஆனால் அவை உருவாக்கிய கொம்புகளாகிய நாம் இளைத்ததில்லை. அரசாங்கப் பள்ளிகளை மீட்டெடுப்பது அரசின் கடமை மட்டுமல்ல அது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

தற்பொழுதுள்ள இளைய சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மையான குடும்பத் தலைவிகளில் 50% முதல் 60% பேர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து கொண்டு குடும்பங்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களில் பலர் சிறந்த இளநிலை அல்லது முதுநிலை கல்வி கற்றவர்கள். தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் அறிவு சரியான முறையில் பயன்படுத்தப்படாமலும் இருக்கிறது. இவர்களில் 5% முதல் 15% சதவீதம் பேர் தாராளமாக அவர்களின் நேரத்தையும் அறிவையும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 அல்லது 3 மணிநேரம் அளிக்க தயாராக இருப்பார்கள் என்பது என் எண்ணம். இவர்கள் அருகில் உள்ள அரசாங்கப் பள்ளிகளில் அவர்களின் திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப வகுப்புகள் எடுத்து அக்குழந்தைகளின் அறிவைப் பெருக்க உதவலாம். தன்னம்பிக்கை, கலை, வாழ்க்கைக் கல்வி போன்ற பல தேர்வுகள் சம்பந்தம் அல்லாத வகுப்புகள் கூட அவர்களையும் அவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளின் தரத்தையும் உயர்த்தும். நேரத்தை செலவிட முடியாதவர்கள் அவர்கள் படித்த அல்லது அருகில் உள்ள அரசு பள்ளிகளின் தேவையுணர்ந்து சிறு சிறு பொருளாதார உதவிகளை வழங்கலாம் அல்லது அப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம். உதாரணமாக வெளிநாட்டில் வாழும் என்னைப்போல சில நண்பர்கள் சேர்ந்து எங்களது பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு ஒரு ஆசிரியரை நியமித்து மாத சம்பளத்தை நாங்கள் வழங்கி வருகிறோம். இந்த உதவி அப்பள்ளிக் குழந்தைகளுக்கும் அந்த ஆசிரியருக்கும் பேருதவியாக உள்ளது.

முக்கியமான மற்றொன்று. உங்கள் குழந்தைகளுக்கு தோல்விகளையும் பழக்குங்கள். எதார்த்தத்தை எடுத்துரையுங்கள். இன்றய தலைமுறையினர் பலர் தோல்விகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு தயாராகின்றனர். இன்றைய செய்திகள் பல இதை உறுதி செய்கிறது. தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி போன்ற உணர்வுப் பூர்வமான தோல்விகள் இவர்களை எளிதில் தற்கொலையின் பக்கம் நகர்த்திச் சென்றுவிடுகிறது. நாம் ஒவ்வெருவரையும் ஒவ்வொரு வினாடியும் கவனித்துக் கொண்டிருக்க முடியாது. நாம் கொடுக்கும் அளவுக்கு அதிகமான செல்லம், வசதி வாய்ப்பை மீறி அவர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வசதிகள் அபாயகரமானது. குழந்தைகளை எதார்த்தத்தில் வளருங்கள். நல்ல பல புத்தகங்களை அவர்களுக்குப் பழக்குங்கள். கூட்டுக்குடும்ப முறை ஒழிந்து தனிக்குடும்ப ஒற்றைக் குழந்தை வளர்ப்பு முறையில், பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளும் நல்ல நண்பர்கள் சிறந்த புத்தகங்களாகக் கூட இருக்கலாம்.

வல்லரசு என்பது மத்திய வங்கி வெளியிடும் வெற்றுத் தாள்களில் இல்லை. எல்லையில் குவித்திருக்கும் எண்ணிலடங்கா படைகளில் இல்லை. அது ஒவ்வொரு குடிமக்கள்களின் மனதில், அவர்களின் வாழ் வாதாரங்களில், நம்பிக்கையில், பங்களிப்புகளில் உள்ளது.

தோள்கொடுங்கள் தோழர்களே! எதிர்கால இந்தியா நம் கைகளில்!

-- லிங்கேஷ்.

Monday, February 1, 2010

சிக்கனமும் ஒரு சேமிப்பே!

உலகப் பொருளாதார மந்தம், வேலையிழப்புக்கள், உணவுப் பற்றாக்குறை, உயரும் உணவுப் பொருள்களின் விலை, பலம் பெற்றுக் கிளம்பிக் கொண்டிருக்கும் புதுப் புது நோய்கள், கட்டுக்கடங்காத பணவீக்கம், மாறிவரும் தட்பவெப்ப/பருவ நிலைகள் - இவைகள் சமீப காலங்களில் நம் கவனத்தை அதிகம் ஈர்ப்பவை. மனித குல வரலாற்றைப் படித்தவர்களுக்கு இவையாவும் புதியவை இல்லை என்றாலும் தற்பொழுதுள்ள சூழ்நிலைகளில் இவற்றினை ஒதுக்கிவிட முடியாதுதான். 

உணவுப் பற்றாக்குறையும் விலைவாசி உயர்வும்:

நாம் அன்றாடம் உபயோகிக்கும் அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணை வகை உள்பட அனைத்து பொருள்களின் விலைகள் தாறுமாறாக ஏறிவிட்டன. உதாரணத்திற்கு துவரம் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஓராண்டிற்கு முன் 40 முதல் 45 ரூபாய்க்கு விற்கப்பட்டது தற்பொழுது 75 முதல் 90 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. கிட்டத்தட்ட இரு மடங்கு விலையேறிவிட்டது. 

பணவீக்கம்: 

இன்று உங்கள் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூபாய் 15 ஆயிரம் செலவாகிறது என்றால் இன்னும் ஐந்து வருடங்களில் 6% பணவீக்கத்தில் கணக்கிட்டால் ரூபாய் 20 ஆயிரம் தேவைப்படும். 35 ஆண்டுகள் கழித்து (ஓய்வு வயதில்) தேவைப்படும் தெகை ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரம். நம் அரசாங்கத்தின் கணக்குப்படி கடந்த வருடத்தின் சராசரியான பணவீக்கம் என்பது 10.45%. அப்படிப் பார்த்தால் இன்னும் ஐந்து வருடங்களில் தேவைப்படும் தெகை ரூபாய் 25 ஆயிரம். 35 ஆண்டுகள் கழித்து தேவைப்படும் தெகை ரூபாய் 4 லட்சத்து 86 ஆயிரம். இந்த பணம் ஒரு மாதத்திற்கு தேவையானது. 

வேலையிழப்பின் போதோ அல்லது ஓய்வுக்காலங்களின் போதோ உங்களுக்கு மாதம் ரூபாய் 15 ஆயிரம் வருமானம் வேண்டும் என்றால் 20 லட்சங்களை சாரசரியாக 9% வட்டியில் வைத்திருக்க வேண்டும். மாதம் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வருமானம் வேண்டும் என்றால் சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாயை சாரசரியாக 9% வட்டியில் வைத்திருக்க வேண்டும். இதனுடன் சொந்த வீடு, குழந்தைகளின் கல்வி, எதிர்பாராத மருத்துவச் செலவு போன்ற செலவுகளையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

காரணம் எவையாக இருப்பினும் அதிகம் பாதிக்கப்படுவது நாம்தானே?

சிக்கனமும் சேமிப்பும்: 

சிக்கனமும் சேமிப்பும் குடும்பப் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. இன்று நம்மில் பலர் நல்ல முறையில் சிக்கனத்தையும் சேமிப்பையும் கடைபிடித்து வருகிறோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. வங்கி சேமிப்பு, பங்கு வர்த்தகம் சார்ந்த சேமிப்பு, தங்க நகை சேமிப்பு போன்றவைகள் போல சில சேமிப்புக்கள் இங்கே. 

என் உறவினர்கள் வருடத்திற்கு ஒருமுறை அரிசி, பருப்பு (துவரை, தட்டை, உளுந்து, பச்சைப் பயறு), தானியம், புளி, மிளகாய், மஞ்சள் போன்ற பொருள்களை அவைகளின் விளைச்சள் காலங்களில் கிராம சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளிடமிருந்து மொத்தமாக வாங்கி, பங்கிட்டு, சேமித்து பயன்படுத்துவதை ஆச்சர்யமாகப் பார்த்துள்ளேன். 

100 கிராம் துவரம் பருப்பு வாங்கும் விலைக்கும் 1 கிலோ துவரம் வாங்கும் விலைக்கும் 100 கிலோ துவரம் வாங்கும் விலைக்கும் விலை வித்தியாசம் அதிகம். அதே போல் மொத்தமாக வாங்கும் போது நாம் கணிசமாக சேமிக்கவும் முடியும். சட்டென்று உயரும் விலைவாசியும் நிச்சயம் நம்மை பாதிக்காது. எப்பொழுது எங்கு வாங்குவது, எப்படி பதப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான அறிவு நிச்சயம் உதவும். 

குடும்ப மருத்துவக் காப்பீடு அவசியம். "எனக்குத்தான் என் நிறுவனம் குடும்ப மருத்துவக் காப்பீடு அளித்துள்ளதே" என்ற உங்களது நியாமான கேள்வி புரிகிறது. வேலை இழந்தாலோ ஓய்வு பெற்றாலோ நிறுவனத்தின் மருத்துவ காப்பீடு பயன்தராது. அதே சமயம் "Pre Existing Dieses" என்று சொல்லப்படுகின்ற நோய்களுக்கு உண்டான காப்பீடு, நீங்கள் நிறுவனம் மாறும் போது ரத்தாகிவிடும். இத்தகைய சிக்கல்களில் இருந்து விடுபட கூடுதலாக ஒரு மருத்துவக் காப்பீடு ஒன்றை எடுத்துக்கொள்வது நலம். அதை தொடர்ந்து புதுப்பித்து வரவும். 

தகுந்த திட்டமிட்ட ஆயுள் காப்பீடு. உங்களது ஆண்டு வருமானத்தைப்போல் குறைந்த பட்சம் 5 முதல் 10 மடங்கு தொகைக்கு ஆயுள் காப்பீடு அவசியம். டேர்ம் (Term Insurance) ஆயுள் காப்பீட்டைப் பற்றி அறிந்து கொள்ளவும். குறைவான பிரிமியம் தொகையில் அதிக காப்பீடு கிடைக்கும். 

வரவு செலவுகளை தினமும் எழுதுங்கள். ஒரு ரூபாய் வரவு அல்லது செலவு என்றாலும் தவறாமல் எழுதி வாருங்கள். ஆறு மாதத்தில் நிச்சயமாக உங்களின் நிதி நிலைமை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்து சேமிப்பு உயரும். குழந்தைகளுக்கு சேமிக்கவும், வரவு செலவு எழுதுவதையும் கற்றுக் கொடுத்து ஊக்கப் படுத்துங்கள். உங்களது வரவு செலவு குறிப்புகளை குடும்ப உறுப்பினர் அனைவரும் படிக்க அனுமதியுங்கள். சேமிக்கவும் சிக்கனமாக இருக்கவும் குடும்ப உறுப்பினர்களின் புரிதல் அவசியம். 

உபயோகப்படுத்திய பொருள்களை பாதுகாத்து வையுங்கள். மறுபயன்பாட்டிற்கோ அல்லது மற்றவர்களுக்கோ பயன்படும். நான் குழந்தையாக இருந்த போது பயன்படுத்திய நடை பழகும் வண்டி (மரத்தால் செய்யப்பட்டது) என் குடும்பத்தில் மற்றொருவர் பயன்படுத்தியது. எனக்குப் பிறகு என் தங்கையும், என் தங்கைக்கு பிறகு என் மாமா குழந்தைகளும் பயன்படுத்தினர். இன்றும் அந்த வண்டி அடுத்த பயன்பாட்டிற்குத் தயராகவே உள்ளது. 

அவசியமே இல்லாமல் வருடத்திற்கு ஓரிரு முறை அலை பேசியை "cell phone" மாற்றிய, ஒவ்வொரு மாதமும் தேவைக்கு மேல் துணிகளை எடுத்த, தினமும் இரண்டு வேளை உணவை (வீட்டில் அம்மா சமைத்துக் கொடுத்தாலும்) விலையுயர்ந்த உணவு விடுதிகளில் உண்ட, என் நண்பன் (நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன்) சமீபத்தில் வேலையிழந்து தடுமாறிய போது எற்பட்ட தாக்கத்தில் எழுதியது. அவன் சொன்ன ஒரு வாக்கியம் அப்படியே இங்கே "நான் வாங்கிய cell phone களை வாங்காமல் பணத்தை சேமித்திருந்தால் வேலையில்லாமல் இருந்த இந்த ஒன்பது மாதங்களுக்கு அது குடும்பத்தை காப்பாற்ற உதவியிருக்கும்". 

சிக்கனமும் சேமிப்பும் நிச்சயம் கேலிப் பொருளள்ள! 

--லிங்கேஷ்.

Monday, January 25, 2010

தொலைக்காட்சி பெட்டி - ஒரு போதைப் பொருளா?

தொலைக்காட்சி பெட்டி - எத்தனை வலிமையான, உலகம் முழுவதும் அனைத்து வயது மக்களும் அதிகம் பயன்படுத்தும் சாதனம். போன நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டு பிடிப்புகளில் மிக முக்கியமானது. மனிதன் முதன் முதலில் சந்திரனில் கால் வைத்த (1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி) நிகழ்ச்சியை, இந்த பெட்டி அமெரிக்க மக்களின் வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு சென்று பிரபலமடைந்தது. அந்த கால கட்டங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை வீடுகளிலிருந்தே கண்டுகளிப்பது என்பது அதிசயமாகவும் அவசியமாகவும் இருந்தது.

தொலைக்காட்சி பெட்டியினால் நிச்சயம் நமக்கு எத்தகைய தீமையும் இல்லை. அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் சிக்கல் உள்ளது.

இன்றைய பல ஆய்வு முடிவுகள் தொலைக்காட்சியின் மூலம் நன்மைகளுக்குப் பதில் தீமைகளே அதிகம் என்று கூறுகிறது. முக்கியமாக ஒரு மனிதனின் கற்பனைத் திறனை அது கடுமையாகப் பாதிக்கிறது என்கிறது. கற்பனைத் திறன் இல்லாத ஒருவன் எவ்வாறு ஒரு கலைஞனாவான்? விஞ்ஞானியாவான்? புதிய கண்டுபிடிப்பை அளிப்பான்? கற்பனை இல்லாத வாழ்க்கை அடுத்த கட்டத்தை அடைவதே இல்லை.

என்னைப் பொறுத்தவரை புகை பிடிப்பது, மது அருந்துவது மற்றும் மற்ற போதைப் பழக்கங்களைப் போலவே கட்டுபாடற்ற தொலைக்காட்சி பயன்பாடும் கருதப்படவேண்டும். இது இன்று பெரும்பாலான குடும்பப் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. குழந்தைகள் ஓடியாடி விளையாடுகிறார்களோ இல்லையோ அவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டியில் காட்சிகள் ஓடியாக வேண்டும்.

அலுவலகம் செல்லும் என் நண்பர்களிடம் நான் கேட்டறிந்த வரையில் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் தொலைக்காட்சியைப் பயன்படுத்துகிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் உடற்பயிற்ச்சிக்காக ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரம் கூட செலவழிப்பதில்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து கொண்டே உணவு உண்பது என்பது இன்று பெரும்பாலான வீடுகளில் கானப்படுகிறது. இவ்வாறு செய்வதால் நமக்கு உணவின் சுவை, அளவு தெரியாமல் அதிக அளவு உண்டு விடுகிறோம். இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இது தான் உடல் பருமன் உள்பட பெரும்பாலான பிரச்சனைகள் தோன்றக் காரணம். மேலும் நமக்காக உணவு தயாரித்து வழங்கும் அம்மா அல்லது மனைவியை நாம் பெரும்பாலும் பாராட்ட மறந்து விடுகிறோம். அவர்களை விட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லவா நமக்கு முக்கியமாகப் போய்விட்டது.

இன்று ஒளிபரப்பில் உள்ள 95% தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கழிவுகள், அருவருப்பானவை. சேட்டிலைட் சேனல்கள் இவைகளை நமது வரவேற்பறைக்குள்ளும் படுக்கையறைக்குள்ளும் கொட்டிக் கொண்டிருக்கின்றன. குப்பை மற்றும் கழிவுகளுக்கிடையே நல்ல நிகழ்ச்சியை கண்டெடுப்பது என்பது பெரும்பாலும் இயலாமல் போய்விடுகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதினால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வருவதில்லை என்கின்றனர். பிரச்சனைகளைத் தீர்க்குமா தொலைக்காட்சிப் பெட்டிகள்? மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை எரித்த கதைதான் என் ஞாபகத்திற்கு வருகிறது. பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒழிவதால் அவைகள் தீர்ந்து விடப் போவதில்லை. நாம் அதை தைரியமாக எதிர்கொள்ளப் பழக வேண்டும். வீடுகளில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ள நாம் தயங்கினால் எப்படி சமுதாயத்தை எதிர்கொள்ள முடியும்?

குழந்தைகள் நம் சொல்லைக் கேட்டு வளர்வதில்லை. நம் செயல்கள், பழக்க வழக்கங்களைப் பார்த்து தான் வளர்கின்றனர். மாற்றம் நம்மில் தொடங்கி நம் குழந்தைகளின் மூலம் அடுத்த சந்ததிகளுக்குச் செல்ல வேண்டும என்பது என் ஆசை.

தொலைக்காட்சி பெட்டியே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. எப்பொழுது எந்த நிகழ்ச்சி அவசியமோ, அப்பொழுது மட்டும், அந்த நிகழ்ச்சியை மட்டும் தான் பார்க்க வேண்டும். "வேண்டாம்" என்று நாம் சொல்லப் பழக வேண்டும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்பதால் உண்டாகும் நன்மைகள்
  • மின்சாரமும், மின்சாரத்திற்கு செலவிடப்படும் பணமும் மிச்சப்படுகிறது.
  • உங்கள் கண்களின் ஆயுள் அதிகரிக்கும்.
  • கணவன் மனைவியிடையே ஆரோக்கியமான நேரப் பங்கீடு உண்டாகும்.
  • குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோரிடம் நமது அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். அவர்களுக்கு அவசியமானதும் தேவையானதும் இதுதான்.
  • விருந்தோம்பல் வளரும்.
  • உடல் பருமன் கட்டுப்படும்.
  • குழந்தைகளின் ஆற்றலும் கற்பனையும் அதிகரிக்கும்.
  • அண்டை அயலரின் நட்பு வட்டம் பெருகும்.
  • உங்களுக்கும் ஒரு தனி லட்சியம் உண்டாகும். உங்களது பயணம் இப்பொழுது அதை நோக்கி எந்த தடைகளும் இன்றி பயணிக்கும்.
  • வெற்றியை ருசிக்கத் தொடங்குவீர்கள்.
  • மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அடுத்த தலைமுறைக்கு விளங்குவீர்கள்.

 எவ்வாறு தொலைக்காட்சி பார்ப்பதை கட்டுப்படுத்துவது?
  •  நீங்கள் தான் எதிர்கால உலகின் நம்பிக்கை. என்னால் எதுவும் முடியும் என்று நம்புங்கள்.
  • படுக்கையறையில் உள்ள தொலைக்காட்சி பெட்டியை முதலில் அகற்றிவிடவும்.
  • தொலைக்காட்சி பெட்டியின் தொலையியக்கியை (TV remote control) வங்கி பெட்டகத்தில் (bank locker) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வைத்துவிடுங்கள்.
  • நீங்கள் தற்சமயம் தொடர்ந்து பார்த்து வரும் நிகழ்ச்சியை தவிர்க்க, அவை ஒளிபரப்பாகும் நேரங்களில்
    • கோயிலுக்கோ அல்லது கடைகளுக்கோ சென்று வரலாம். ஒருவாரம் அல்லது இரண்டு வாரம் ஒரு நிகழ்ச்சியை தவிர்க்கும் போது உங்களுக்கு அதன் மேல் உள்ள ஈடுபாடு நிச்சயம் குறைந்திருக்கும்.
    • உங்களுக்கு விருப்பான துறைகளில் உள்ள நல்ல நல்ல புத்தகங்களை வாசிக்கலாம். அருகில் உள்ள நூலகங்களில் நீங்கள் உறுப்பினராகிவிடலாம்.
    • சிறந்த நடைபயிற்ச்சியோ அல்லது உடற்பயிற்ச்சியோ செய்யலாம். யோகா, தியானம் கூட முயற்ச்சிக்கலாம்.
    • உங்கள் மகன் அல்லது மகள் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரிகளுக்குச் சென்று அவர்களின் ஆசிரியர், நண்பர்களிடம் உரையாடி வரலாம். அவர்களின் திறமைகளையும் தேவைகளையும் பிரச்சனைகளையும் நேரடியாக அறியமுடியும்.
  • விடுமுறை தினங்களில் கட்டாயம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்து குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு விளையாடி மகிழலாம். குடும்ப உறவு வலுப்படும். முக்கிய பண்டிகை மற்றும் பொது விடுமுறையின் போது அவற்றின் அருமை பெருமைகளை நம் குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கேற்ப சொல்லிக் கொடுக்கலாம் (இதற்கு நாம் நிறைய படித்து தெரிந்து கொள்ளவது அவசியம்).
  • வசதி மற்றும் வாய்ப்பு இருப்பவர்கள் வீட்டு தோட்டம் அமைத்து பராமறித்து வரலாம். இதன் மூலம் வீட்டுச்செலவு கூட கணிசமாகக்குறையும்.
நம்மில் பலர் இரவு உணவு உண்டவுடன் உறக்கம் வரும் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் அதிகம். இதுவும் ஒரு தவறான பழக்கம். இது உடல் சோர்வை உண்டாக்கிவிடும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்பதை விட, அந்த நேரங்களை நம் திறமைக்கும் தகுதிக்கும் பொருளாதாரத்திற்கு உட்பட்டு, எவ்வாறு பயன் உள்ளதாகவும் சமுதாயத்திற்கு நன்றியுள்ளதாகவும் மாற்றுகிறோம் என்பதில்தான் நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

நாம் நமக்கான களத்தை முதலில் கண்டறிய வேண்டும். நிச்சயமாக அது தொலைக்காட்சிப் பெட்டியாக இருக்க வாய்ப்பு குறைவு.

--லிங்கேஷ்.

குறிப்பு: கடந்த ஒரு மாதமாக வாரத்திற்க்கு ஒன்று என எழுதி வருகிறேன். என் எழுத்துக்களை பற்றி உங்களின் கருத்துகளையும் மேலான அபிப்பிராயத்தையும்  தவறாமல் எனக்கு எழுதவும்.

Friday, January 15, 2010

நாம் மனிதர்களா?

ஒரு மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை அவன் தேவைகள் என்ன? தேடல்கள் என்ன?

பணமா? உடல் ஆரோக்கியமா? சந்தோஷமா? மகிழ்ச்சியா? நிம்மதியா?

நம் நேரத்தையும், உடல் உழைப்பையும், அறிவையும் எதற்கு பயன்படுத்துகிறோம்? பணம் சம்பாதிக்கத்தானா? பணத்தை சம்பாதித்து விட்டு நாம் எதைப் பெறத் துடிக்கிறோம்? இழந்ததை மறந்து அல்லது இழந்ததை மறைக்க போலியான தேவைகளை உருவாக்கி அல்ப சந்தோஷம் தானே அடைகிறோம்.

பணம் பொருள் சம்பாதிக்க ஆசைப்படும் அளவுக்கும் நாம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோமா?

ஏன் இன்று எல்லாமே வணிகமாகிவிட்டது என்று என்றாவது எண்ணியிருக்கிறோமா? நியாயமான நுகர்வோருக்கு கிடைக்க வேண்டியவை கிடைக்கிறதா? நாம் அளவுக்கு அதிகமாகவும் தேவைக்கு அதிகமாகவும் உபயோகப்படுத்தும் ஒவ்வொன்றும் நமக்கும், நம் அடுத்த சந்ததிகளுக்கும் ஏன் நம் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் கேடு உண்டாக்கிக் கொண்டுள்ளதை உணர்ந்துள்ளோமா? உதாரணத்திற்கு அளவுக்கு அதிகமாக நாம் வாங்கும் ஒவ்வொரு உடையும் ஒரு சக மனிதனின் நிர்வாணத்திற்கு காரணமாக அமைந்துள்ளதை அறிவோமா?

நாம் என்னதான் மருத்துவர், பொறியாளர், கணிபொறி வல்லுனர், சட்ட மேதை, தொழில் அதிபர்கள், சந்நியாசி ஆக இருந்தாலும் நமக்கு உயிர் வாழத் தேவையானது - சுவாசிக்க சுத்தமான காற்று, குடிக்க தூய்மையான தண்ணீர், பசியாற நஞ்சில்லா சத்தான உணவு, உடுக்க உடை, தங்கி நிம்மதியாக உறங்க அமைதியான இடம் தானே? மற்ற தேவைகள் எல்லாம் எங்கிருந்து வந்தது. அவற்றை பெற்றதால் நாம் அடைந்தது என்ன? இழந்தது என்ன?

நம் முன்னோர்களின் தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கும் நாம் ஏன் நம் அடுத்த சந்ததிகளுக்கு தண்டனை தரவேண்டும்?

ஆசையே துன்பத்திற்கு காரணம். அதே ஆசையால் துன்பத்தைப் போக்க முடியும் என்பதை அறிவோமா? ஆசை எதை நோக்கி உள்ளது, அதன் நியாய தர்மங்களின் விளைவுகளைத் தானே நாம் இப்போது கண்கூடாகக் காண்கிறோம்.

நகரத்திலிருப்பவர்கள் ஏன் கிராமத்து மக்களை இளக்காரமாகப் பார்க்கவேண்டும்? அவர்களை விட நகரத்து வாழ் மக்கள் பெருமைப்பட என்ன இருக்கிற்து? மாவாட்டுவது, அம்மி அரைப்பது, உரல் இடிப்பது, துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, கூட்டுவது போன்ற வேலைகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தும் நகர வாழ்க்கை எப்படி கிராம வாழ்க்கையை விட மேம்பட்டது.

நம்முடைய தாத்தா பாட்டி எல்லோரும் எப்படி எழுபது முதல் தொண்ணூறு வயது வரை நோய் நொடி இன்றி வாழ்ந்தார்கள். நம்முடைய பெற்றோர்கள் நாற்பது முதல் ஐம்பது வயதுக்குள் சர்க்கரை, இரத்த அழுத்தம், இதய நோய்கள் பெற்றது எதனால்? இன்றைய செய்திகளைப் பார்த்தால் முப்பது வயதில் ஹார்ட் அட்டாக் என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. ஏன்? இதன் தொடர் விளைவுகளை நாம் எண்ணிப் பார்த்திருக்கிறோமா?

வாழ்க்கையை தொலைத்து, வாழ்நாளைக் குறைத்து எதைப்பெற்று திருப்தி அடைகிறோம்?

நவீன விஞ்ஞானம் மனிதனின் வாழ்நாளை அதிகரித்திருப்பதாக கொக்கரிக்கிறது. உடல் நலத்தைக்கெடுத்து மருத்துவத்தின் மூலமும் நவீன விஞ்ஞானத்தின் மூலமும் நீடித்த வாழ்நாளில் வாழ்வதால் நமக்கு ஆத்ம சந்தோஷம் கிடைக்குமா?

ஒவ்வொரு மனிதனும் வாழும் ஒவ்வொரு நொடியும் இயற்கைக்கு எதிராகவும் இயற்கையை அழித்தும் தான் வலிமையானவன் என்ற போலியான போர்வையில் திரிகிறான். மனிதன் அல்லாத எந்த உயிரினமும் இயற்கைக்கு எதிரான வாழ்க்கையை வாழ்வது இல்லை. பிறகு எப்படி ஆறறிவு சிறந்ததாக இருக்கமுடியும்?

இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு நஞ்சைத் தவிர இவ்வுலகில் நாம் என்ன மிச்சம் வைத்துள்ளோம். அவர்களைப் பொறுத்த வரை நாம் துரோகிகள் தானே?

உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் நாம் மனிதர்களா?

--லிங்கேஷ்.

Friday, January 8, 2010

மின்சார மேலாண்மை

நாம் அறியாமல் செய்யும் சில செயல்கள் கூட வலிமையான விளைவுகளை உண்டாக்கிவிடும் என்பதற்கு  மிகச் சிறந்த உதாரணம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாரம்.

தற்பொழுது பெருமளவில் மின்சாரம் தயாரிக்க நிலக்கரி (coal), இயற்கை எரிவாயு (natural gas), எண்ணெய் வளங்கள் (oil) பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய  எரிபொருள்களை மின்சாரம் தயாரிக்க எரிப்பதன் மூலம் அதிக அளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு (carbon dioxide CO2) வெளிப்படுகிறது. இது தான் இன்றைய பூமி வெப்பமாவதன் முதல் காரணி.  உதாரணமாக ஒரு கிலோவாட் (1 kWh) மின்சாரம் தயாரிக்க எரிக்கப்படும் நிலக்கரி 0.97 கிலோகிராம் அளவு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறது.

நிலம், நீர், காற்று  மாசுபடுவது மட்டுமல்லாது, நாம் இயற்கை வளங்களையும் அழித்துவருகிறோம். இவற்றை நம்மால் திரும்பவும் உருவாக்க இயலாது.

நாம் மின்சாரத்தை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் நம்மால் சிக்கனமாகவும், தேவையில்லாமல் விரையமாகும் மின்சாரத்தை சேமிக்கவும், மின்சார பயன்பாட்டை குறைக்கவும் இயலும்.

நம் நாட்டில் ஒரு குடும்பம் பயன்படுத்தும் சராசரி மின்சாரத்தில் குளிர்சாதனப்பெட்டி (refrigerator) 20% அளவும், ஏர் கன்டிஷன் (air conditioning) 16% அளவும் எடுத்துக்கொள்கிறது. இவற்றினை சரியாக பராமறிப்பதன் மூலமும், பயன்பாட்டினை முறைப்படுத்துவதன் மூலமும் நாம் பெருமளவு மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.

நாம் பயன்படுத்தும் குண்டு விளக்குகள் (bulbs) தான் உலக வெப்பமாதலுக்கு முக்கிய காரணம். இதன் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்த்து சிஎப்எல் (compact fluorescent bulbs CFL) எனப்படும் விளக்குகளை (bulbs) பயன்படுத்தவேண்டும். இதன் மூலம் நாம் 75% விளக்குகளுக்கு பயன்படும் மின்சாரத்தை சேமிக்கமுடியும்.

அலுவலகங்களிலோ அல்லது பொது இடங்களிலோ நீங்கள் கைகளை உலர வைப்பதற்கு ஏர் டிரையரை (Air dryer) பயன்படுத்துவதை தவிர்த்து கைக்குட்டையை உபயோகிக்கலாம்.

வாரத்தில் ஒரு முறையேனும் மிக்ஸி (Mixer), கிரைன்டர் (Grinder) தவிர்த்து ஆட்டுக்கல், அம்மிக்கல்லைப் பயன்படுத்தலாம். மின் சேமிப்போடு சுவையும், உடல் ஆரோக்கியமும் கூடும்.

முடிந்த வரை வாஷிங் மெசினை (Washing machine) பயன்படுத்தாமல் கைகளால் துணிகளை துவைக்கலாம். அதே போல் டிரையரை (Driyer) தவிர்த்து கொடிகளில் உலர்த்தலாம்.

தலை முடியை உலர்த்த ஹேர் டிரையரை (Hair Dryer) பயன்படுத்துவதைத விட்டு சூரிய ஒளியையோ, மின்விசிறியையோ (Fan) பயன்படுத்தலாம்.

மின் சாதனப்பொருள்களை உபயோகிக்காமல் இருக்கும்போது அதன் மின் இணைப்பை துண்டித்துவிடவும். துண்டிக்காமல் இருந்தால் அது சிறிதளவு மின்சாரத்தை உபயோகித்துக்கொண்டுதான் இருக்கும். உதாரணத்திற்கு உங்களுடைய தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் சி.டி. பிளேயரை (CD/DVD Player) நீங்கள் மின் இணைப்பை துண்டிக்காமல் ஒரு வருடம் ஸ்டேண்ட்பை மோடில் (Stand by mode) வைத்திருந்தால் அது எடுத்துக்கொள்ளும் மின்சாரம் ஏறக்குறைய 102.49 கிலோவாட்/வருடம்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதால் நமக்கு இரண்டு பயன்கள். தண்ணீர் சேமிக்கப்படுவதுடன், அதை தொட்டியில் ஏற்ற பயன்படுத்தப்படும் மின்சாரமும் சேமிக்கபடுகிறது.

தினமும் துணிகளை அயர்ன் பண்ணும் (iron) பழக்கத்தை மாற்றி, வாரத்திற்கு ஒரு முறை வீட்டில் இருக்கும் அனைவரின் துணிகளையும் ஒரே நேரத்தில் அயர்ன் செய்யலாம். இதன் மூலம் மின்சாரம் சேமிப்பதுடன் காலை நேரத்து படபடப்பும் (tension) குறையும்.

அனைத்து நேரங்களில் எரிந்து கொண்டிருக்கும் அலங்கார விளக்குகள், சாமி படம் மற்றும் புகைப்படங்களின் மேல் உள்ள விளக்குகளை எல்லாம் எல்ஈடி (LED) விளக்குகளாக மாற்றிவிடலாம். இவை குறைந்த அளவே மின்சாரத்தை உபயோகிக்கும். ஜிரோ வட்ஸ் (Zero watt) எனப்படும் விளக்குகள் ஏறக்குறைய 14 முதல் 18 வாட் அளவு மின்சாரத்தை உபயோகிக்கும். அவைகளை நிச்சயம் மாற்றி விடலாம்.

உங்களிடம் மனமும், வசதியும் இருந்தால் நீங்கள் உங்களுக்கான மின்சாரத்தை சிறிதளவேனும் சூரிய ஒளியில் (Solar Panels) இருந்தோ, மினியேட்ச்சர் காற்றாலையின் (Wind Power Generator) மூலமோ தயாரித்து சுற்றுச்சூழலைக் காக்கலாம். சொந்த வீட்டில் வசிப்போர் வாய்ப்பு இருந்தால் சூரிய ஒளியின் மூலம் நீரை சூடுபடுத்தி (Solar Water Heater) பயன்படுத்திக்கொள்ளலாம். அரசாங்கம் இதற்கெல்லாம் மானியம் கூட தருகிறது.

Saving electricity doesn't just save money, it also saves the planet.

Whenever you save energy, you not only save money, you also reduce the demand for such fossil fuels as coal, oil, and natural gas. Less burning of fossil fuels also means lower emissions of carbon dioxide (CO2), the primary contributor to global warming, and other pollutants. Average emissions from home electricity use is 1693 kilograms of CO2 annually.

  1. Set your refrigerator temperature as close to 37 degrees and your freezer as close to 3 degrees as possible. Check the gaskets around your refrigerator/freezer doors to make sure they are clean and sealed tightly. Refrigerators approximately uses 20% of total Household electricity use. Your refrigerator does not have to work as hard to keep cool if it's placed in the coolest place in your kitchen. Careful placement saves money and energy use. If you have the option, place your refrigerator as far away from your oven/stove and windows as possible.
  2.  In the typical home, air conditioning uses more electricity than anything else -- 16% of total electricity used. A window unit AC uses 500 to 1440 watts, while a 2.5-ton central system uses about 3500 watts. That's a lot of energy. A floor fan uses only 100 watts on the highest speed, and ceiling fans use only 15 to 95 watts depending on speed and size. Each degree below 78 will increase your energy use by 3-4%. Clean or replace air filters as recommended. Energy is lost when air conditioners and hot-air furnaces have to work harder to draw air through dirty filters. Cleaning a dirty air conditioner filter can save 5 percent of the energy used. That could save 175 pounds of CO2 per year. If you use a ceiling fan with your A/C, you'll be able to set your thermostat a few degrees higher. That simple change can translate into great savings: For every degree you raise the thermostat, you can save 7-10 % on cooling costs and energy.
  3. Buy energy-efficient compact fluorescent bulbs (CFL) for your most-used lights. Although they cost more initially, they save money in the long run by using only 25% of the energy of an ordinary incandescent bulb and lasting 8-12 times longer. They provide an equivalent amount of bright, attractive light. Only 10% of the energy consumed by a normal light bulb generates light. The rest just makes the bulb hot. One compact fluorescent bulb can save 120 kilograms of CO2 per year.
  4. Turn off lights and equipment when not in use. Even in standby mode, electronic devices and appliances draw power. Your DVD, TV, stereo, computers, mixer, grinder, computer CPU, monitor, microwave oven and battery chargers consume as much as 75% of their electricity while they are turned off. These are called 'phantom loads'. A switched-off power strip prevents appliances from using energy when they're not in use.
  5. Turning off your office computer at night and on weekends will save about 75% of the energy it would take to leave the computer running constantly. Despite popular belief, you won't wear out your computer faster by turning it off at night. Since the life of electronic equipment is a function of both operating hours and heat, you're helping your computer by turning it off. If you are going to be away from your computer for more than 5 minutes, turn off your monitor; if you're going to be away for more than 2 hours, turn off the computer, too. Like many appliances, your computer wastes much of its electricity as heat, which is why it uses a fan whenever it's on.
  6. Set your clothes washer to the warm or cold water setting, not hot. Switching from hot to warm for two loads per week can save nearly 225 kilograms of CO2 per year if you have an electric water heater, or 70 kilograms for a gas heater.
  7. Turn down your water heater thermostat. Thermostats are often set to 140 degrees F when 120 is usually fine. Each 10 degree reduction saves 275 kilograms of CO2 per year for an electric water heater, or 200 kilograms for a gas heater. 
  8. Use Solar Water Heather. Investing in a solar water heater can save 4.9 tons of CO2 annually.
  9. Select the most energy-efficient models when you replace your old appliances. Look for the Energy Star Label - your assurance that the product saves energy and prevents pollution. Buy the product that is sized to your typical needs - not the biggest one available. Front loading washing machines will usually cut hot water use by 60 to 70% compared to typical machines. Replacing a typical 2000 refrigerator with a new energy-efficient model, saves 1.4 tons of CO2 per year.
Think about the consequences of your acts. In little acts like this, we are avoiding tonnes of CO2 emissions.

--லிங்கேஷ்

Tuesday, January 5, 2010

Guidelines to bring you the better human in you

HEALTH:
  • Drink plenty of water.
  • Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.
  • Eat more foods that grow on trees and plants, and eat less food that is manufactured in plants.
  • Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy.
  • Make time for prayer.
  • Play more games (Physical not video or computer).
  • Read more books than you did in 2009.
  • Sit in silence for at least 10 minutes each day.
  • Sleep for 7 hours.
  • Take a 10-30 minutes walk every day ---- and while you walk, smile.
PERSONALITY:
  • Don't compare your life to others'. You have no idea what their journey is all about.
  • Don't have negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive present moment.
  • Don't over do ; keep your limits.
  • Don't take yourself so seriously ; no one else does.
  • Don't waste your precious energy on gossip.
  • Dream more while you are awake.
  • Envy is a waste of time. You already have all you need.
  • Forget issues of the past. Don't remind your partner with his/her mistakes of the past. That will ruin your present happiness.
  • Life is too short to waste time hating anyone. Don't hate others.
  • Make peace with your past so it won't spoil the present.
  • No one is in charge of your happiness except you.
  • Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
  • Smile and laugh more.
  • You don't have to win every argument. Agree to disagree.
COMMUNITY:

  • Call your family often.
  • Each day give something good to others.
  • Forgive everyone for everything.
  • Spend time with people over the age of 70 and; under the age of 6.
  • Try to make at least three people smile each day.
  • What other people think of you is none of your business
  • Your job won't take care of you when you are sick. Your family and friends will. Stay in touch.
LIFE:
  • Do the right things.
  • Get rid of anything that isn't useful, beautiful or joyful.
  • GOD heals everything.
  • However good or bad a situation is, it will change.
  • No matter how you feel, get up, dress up and show up.
  • The best is yet to come.
  • When you awake alive in the morning, thank GOD for it.
  • Your Inner most is always happy. So, be hap.
I got the above details as a forwarded email and it is interesting. I agree most on the list. What about you?

-- Lingesh.

Friday, January 1, 2010

Reduce, Reuse, Recycle - Carry bags and Tissue pappers

Carry bags and Tissue pappers


உலகம் வெப்பமாகின்றது, மழையளவு குறைந்துவிட்டது, விவசாயம் செய்யும் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு சுருங்கிக்கொண்டே வருகிறது, வாழும் சூழ்நிலை பாழ்பட்டுக்கொண்டே செல்கிறது. இவை சமீபகாலங்களில் என் கவனத்தை அதிகம் ஈர்த்தவைகள். என்னால் என்ன செய்யமுடியும் அல்லது நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று தான் இதுவரை எண்ணியிருந்தேன். சில உண்மைகள் சுடும் அல்லவா.

ஒரு சின்ன உதாரணம். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு carry bag, tissue papper என்ற சமாச்சாரங்கள் நான் வாழ்ந்த பகுதிகளில் (வடமேற்கு தமிழகம்) அவ்வளவாக பிரபலமாகவில்லை (கிட்டத்தட்ட கிடையாதே என்று சொல்வேன்). ஏதாவது வாங்க செல்லும்முன் வீட்டிலிருந்து துணிப்பை அல்லது wire பை எடுத்து சென்று வாங்கிவருவது வழக்கம். அதேபோல் முகம் அல்லது கை துடைக்க வீட்டிலிருந்தால் துண்டு அல்லது வெளியிடங்களென்றால் கைக்குட்டையைப் பயன்படுத்தினோம்.

இதனால் காசு விரையமாவதும், சுற்றுப்புறச் சீர்கேடும் ஏற்படவில்லை.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் carry bag ம், tissue papper ம் நம் அன்றாட வாழ்வில் அத்தியாவிசியப் பொருளாகிவிட்டது.

அதிலும் குறிப்பாக மறு பயன்பாடு (Reuse) செய்ய இயலாத carry bag யை தான் நாம் அன்றாடம் அதிகம் பயன்படுத்துகின்றோம். Recycle மற்றும் Reuse செய்யாமல் தூக்கி எறியப்படும் இதனால், மிக மோசமான சுற்றுப்புறச் சீர்கேடு ஏற்படுகிறதது. மழை நீர் பூமிக்குள் செல்வதை தடுக்கும் இத்தகைய carry bag க்குகள், மக்குவதற்கும் சில பல தலைமுறைகளையும் எடுத்துக்கொள்கிறது.

உலக வெப்பமாகிக்கொண்டிருப்பதற்கும், மழையளவு குறைந்து வருவதற்கும், மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த மரங்களிலிருந்துதான் பெருமளவில் tissue papper தயாரிக்கப்படுகிறது.

ஒரு டன் பேப்பர் தயாரிக்க 17 மரங்கள் அழிக்கப்படுகின்றன, இரண்டு பேரல்கள் (barrels) எரிபொருள் (சராசரியாக ஒரு கார் 2000 கிலோமீட்டர் தொலைவு பயனிக்க பயன்படும் எரிபொருள்), 4,100 கிலோவாட் எரிசக்தி (சராசரியாக ஒரு வீட்டிற்கு ஆறு மாதம் பயன் படக்கூடியது) பயன்படுத்தப்படுகிறது. இதனால் 27 கிலோ மாசு வெளியேற்றப்படுகிறது.

ஒரு டன் பேப்பர் தயாரிக்க அழிக்கப்படும் 17 மரங்கள், ஒரு ஆண்டில் 114 கிலோ அளவுள்ள கார்பன்டை ஆக்சைடை (carbon dioxide) கிரகித்துக்கொள்கிறது/சுத்தப்படுத்துகின்றது.

என்னால் உடனடியாக 17 மரங்களை வளர்க்க சாத்தியமில்லை ஆனால் நான் பயன்படுத்தும் carry bag மற்றும் tissue papper ன் அளவை பாதிக்கு மேல் நிச்சயமாக குறைக்க முடியும். பயன்படுத்தும் carry bag ம் மறு பயன்பாட்டிற்கு (Reuse) தகுதி உள்ளவற்றையே தேர்ந்தெடுக்க முடியும். தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் carry bag யை பயன்படுத்த நேர்ந்தால் அதை கண்ட இடங்களில் வீசிச்செல்லாமல் Recycle செய்ய உதவலாம்.


Reduce, Reuse, Recycle


There are many ways to produce less waste
  • Reduce the amount and toxicity of trash you throw away and reuse containers and products.
  • Recycle as much as possible and buy products with recycled content.
  • Practice composting by using microorganisms (mainly bacteria and fungi) to decompose organic waste, such as food scraps and yard trimmings.

Easy Ideas 
  • Having an event? A marriage, a family function, a party, a get together? Provide a container for recyclables and others for trash.
  • Use cloth napkins and dish towels instead of paper ones.
  • Reuse bags and containers. 
  • Take your own cloth or canvas bag when you go shopping - groceries, clothes, whatever! 
  • Use eco-friendly dishes - like bowls made of recycled magazines or glassware instead of paper plates.
  • Start reusing a reusable water bottle and just say no to plastic.
  • Make sure your printer paper is 100% post-consumer recycled paper.
  • Pick up trash or recycling that you see around town- just because other people don't recycle doesn't mean you shouldn't.
  • Try a reusable water bottle- they're easy to wash, and can be used for both hot and cold liquids.
  • Reuse boxes for gifts and wrap them with newspaper.
  • Donate! You can donate clothes, appliances that still work, shoes, and kitchenware.
  • Use Evite or facebook for party and event invitations - it saves paper AND you can know who's coming in an instant!
  • Revamp your old clothes! Spice up a shirt you never wear with sequins, or make an old pair of jeans into shorts.
  • Use old stuff to make art- make a mobile from CDs, or collage from magazines.
  • Use eco-friendly dishes- like bowls made of recycled magazines or glassware instead of paper plates.
  • Send an e-blast to family and friends with information and tips on recycling.
References
http://www.epa.gov/waste/conserve/rrr/index.htm
http://www.dosomething.org/tipsandtools/11-facts-about-recycling

தனிப்பட்ட மனிதனிடம் தொடங்கும் இந்த மாற்றம் நிச்சயம் சமுதாயத்திலும் பரவும் என்ற நம்பிக்கையில் புத்தாண்டை எதிர்கொள்ளும்,

-- லிங்கேஷ்