கடந்த வாரத்தில் அலுவலக வேலை விசயமாக சிங்கப்பூருக்கு பயணப்பட நேர்ந்தது.
ஒரு மாலைப்பொழுதில் விமானத்தில் இருந்து இறங்கி சிங்கப்பூர் குடியேற்ற சோதனையைச் சந்தித்த பொழுது எனது கடவுச் சீட்டினை அந்த அதிகாரியின் கணிப்பொறியால் படிக்க இயலவில்லை.
உடனே வேறொரு அதிகாரி என்னை மிகவும் மரியாதையுடன் அருகில் உள்ள ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார். அந்த அறைக்குள் சென்றவுடன் அதனுள் இருந்த மற்றொரு அறைக்குள் அழைத்துச் சென்று என்னை ஒரு ஓரமாக நிற்க வைத்தார். அந்த அறையப் பார்த்த பொழுது அது ஒரு சரக்கு அறை (store room) போல் எதுவும் ஒழுங்கில்லாமல் இருந்தது. அடிவயிற்றில் லேசான ஒரு பயம் தொற்றிக்கொண்டது. ஒரு மூலையில் சற்றே பெரிய அளவில் இருந்த ஒரு கணிப்பொறியின் அருகில் அழைத்துச் சென்று எனது வலது இடது கட்டை விரலின் ரேகையினை எடுத்து சோதனை செய்தார்.
உலகில் உள்ள அனைத்து குற்றவாளிகளை என்னுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார் என்று புரிந்தவுடன் மனதிற்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை அந்த நிமிடம் வரை நான் ஒரு சந்தேகக் குற்றவாளி. என் வாழ்கையில் முதன் முறையாக சிறிது நேரம் சந்தேகக் குற்றவாளியாக இருந்தது கூட சிறந்த அனுபவமாக இருந்தது. இரண்டு நிமிடங்களின் முடிவில் அந்த கணிப்பொறி என்னை குற்றவாளி இல்லை என்று சொல்லிவிட்டது. பிறகு ஒரு நல்ல அறையில் அமரவைத்துவிட்டு வேறொரு இடத்திற்குச் சென்று எனது கடவு சீட்டின் விபரங்களை தட்டச்சு செய்து சிறிது நேரத்திலேயே விசா வழங்கி என்னை அனுமதித்துவிட்டார்.
ஒரு முப்பது நிமிட தடுமாற்றம் தாமதம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த கடவு சீட்டு ஒரு ஆண்டுகளுக்கு முன்னால் நியூயார்க் நகரில் உள்ள நம் நாட்டின் தூதரகத்தால் புதுப்பித்து தரப்பட்டது.
அவர்களின் கவனக்குறைவு எனக்கு எவ்வளவு அசெளகரியத்தில் கொண்டுவிட்டது பாருங்கள்.
கருத்து: அடிப்படைகள் சரியாக இல்லாதவரை அவஸ்த்தைகள் தொடரத்தான் செய்யும்.

9 comments:
நானும் இப்படித்தான் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் போன போது எங்களை வந்து கேட்ச் பிடித்தனர்.அப்புறம் ஃபார்மாலிட்டிஸ் முடிந்ததும் புன்னகையுடன் அனுப்பினர்...
இப்படி எல்லாம் நடக்குமா? நெதர்லேண்டில் வேகனிங்கன் நகரில் ஒரு பேங்கில் என்னுடைய டிராவலர்ஸ் செக்கை மாற்ற மறுத்துவிட்டனர். காரணம் அப்போதைய பாஸ்போர்ட்டில் என் போட்டோ ஒட்டி அதற்குமேல் லேமினேஷன் செய்திருந்தார்கள். அது செல்லாது என்று சொல்லிவிட்டார்கள்.
மறுபடி வேறொரு பேங்கில் மாற்றித்தந்தார்கள்.
@கோவை நேரம்: ஆம்... வெளிநாடு செல்லும்போது ஒரு சிறு சந்தேகம் நம்மீது வந்தாலும் இப்படிப்பட்ட தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். கருத்துக்கு நன்றி.
வருகைக்கு மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா அவர்களே. நாம் வெளிநாடு செல்லும் போது நமது கடவு சீட்டுதான் நம்மைவிட முக்கியமானது. நமது அரசு தான் தரமானதாகவும் தேவையெனில் எளிதில் மாற்றித்த வேண்டும்.
தவறு நியுயார்க் அலுவலகத்திலா? இவ்வாறு நடவாதிருக்க நாம் எப்படி பார்த்துக் கொள்வது? புதுப்பிக்கும்போது சரி பார்க்க வேண்டிய விவரங்களை பகிரவும்.
தவறு நியுயார்க் அலுவலகத்தில் தான். நாம் நமது தகவல்களைத்தான் சரிபார்க்க முடியும். ரீடரில் ரீடாகவில்லையெனில் எவ்வாறு சரிபார்ப்பது என்பது தெரியவில்லை. விசாரித்து தெரியவந்தவுடன் தெரிவிக்கிறேன்.
Hello
Any passport issued before 2008 in USA by Indian Embassy came without reader information, which is now mandatory every country. I still carry my passport without reader and every where they manually make entry for me. My family
got passport after 2008, it have reader.
Karthik
Karthik,
Mine was issued on 2011 and it has the reader cab abilities. I believe some issue with printing the passport and it is not readable anymore.
Thanks for your comments.
Lingesh

Post a Comment