இளகிய மனம், விபத்து பற்றிய செய்தியை விரும்பாதவர்கள் தயவுசெய்து மேற்கொண்டு படிக்க வேண்டாம்.
இன்று அலுவலகத்தில் வேலைப்பளுவின் காரணமாக 10 மணிக்கு மேல்தான் வீட்டிற்கு கிளம்ப முடிந்தது. வரும் வழியில் சகோதரர் ஒருவர் மோட்டார் வண்டியில் இருந்து தவறி சாலையில் விழுந்துவிட்டார். தலையில் பலமான அடி. அதிகப்படியான உதிரம் வழிந்துகொண்டிருந்தது. சிறு கூட்டம் கூடிவிட்டது. நானும் என்னுடைய நண்பரும் எங்களது வண்டியை நிறுத்திவிட்டு அடிபட்டவரின் அருகில் சென்று பார்த்தோம். அனைவரும் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தனரே அன்றி ஒருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனடியாக நானும் என் நண்பரும் அவரவர் அலை பேசியில் 108யை அழைத்து தகவல் கொடுத்துவிட்டு (அவர்கள் வர ஒரு மணிநேரம் ஆகும் என்று சொன்னதெல்லாம் வேறு கதை... அதைப்பற்றி தனியாக ஒரு இடுக்கையில் பேசுவோம்), அடிப்படவரின் கால் சட்டைப்பையைத் துலாவினோம். ஒரு பையில் அவருடைய அலைபேசியும் மற்றொரு பையில் சில காகிதங்களும் இருந்தன. அவரின் அடையாளம் அலுவலகமுகவரி எதுவும் கிடைக்கப் பெறவில்லை. அருகில் இருந்த ஒருவர் அடிபட்டவரின் அலைபேசியை எடுத்து கடைசியாக பேசிய எண்ணைத் தொடர்பு கொண்டு அடிபட்ட விபரம் இடத்தினை கூறினார். இதற்கிடையில் அந்த வழியில் வரும் வாகனங்களை நிறுத்தி அடிபட்டவரை மருந்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. ஒருவரும் வாகனத்தை நிறுத்த முன்வரவில்லை. ஆட்டோக்களும் கூட அவரை ஏற்ற மறுத்துச் சென்றுவிட்டனர். இப்படியாக 10 நிமிடங்கள் சென்றுவிட்டன. அவரிடம் உயிர் இருந்துகொண்டுதான் இருந்தது ஆனால் உதிரமும் தொடர்ந்து வழிந் துகொண்டேயிருந்தது. பின்பு அருகில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அவசர ஊர்தியை அழைத்து வந்து அடிபட்டவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினோம். அவசர ஊர்தி புறப்படும் சமயம்தான் காவல் துறையைச் சார்ந்தவர்கள் வந்தார்கள். அடிபட்டது 10 மணி 15 நிமிடம். 108க்கு தகவல் குடுத்த நேரம் 10 மணி 21 நிமிடம். மீண்டும் 108க்கு பேசிய நேரம் 10 மணி 38 நிமிடம். அப்போது அவர்கள் சொன்னது, அவசர ஊர்தி 10 மணி 25 நிமிடத்திற்கே புறப்பட்டுவிட்டது என்று. வேறொரு தனியார் அவசர ஊர்தியில் அவரை ஏற்றிய நேரம் 10 மணி 45 நிமிடம். இது நடந்தது சென்னையின் மிக முக்கியமான அதிக போக்குவரத்து நிறைந்த சாலை. ஒரு கிலோ மீட்டருக்குள்ளேயே காவல் நிலையம், மருத்துவமனை, அவசர ஊர்தி நிலையம் என சகல வசதியும் உள்ள இடம். இத்தனையிருந்தும் அவரை அவசர ஊர்தியில் ஏற்றவே 30 நிமிடங்கள் ஆகிவிட்டது.
அதன் பின்பு வீடு வரும் வரை என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. ஏதோ தோற்று விட்டதைப் போன்ற வெறுப்பு. நாளை இதே போன்று நமக்கோ நமக்கு தெரிந்தவருக்கோ நடந்தால், இச் சமுதாயம் இப்படித்தானே வேடிக்கை பார்க்கும் என்ற பயம் கலந்த அருவருப்பு.
நமக்கெல்லாம் உடனடியாகத் தேவையான ஒன்று விழிப்புனர்வு. ஒருவருக்கு அடிபட்டாலோ அல்லது அவசர உதவி தேவையென்றாலொ என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையான அவசியமான பயிற்சி தேவை. பதட்டத்தில் தவறு செய்ய நிறைய வாய்ப்பு உள்ளது. கோல்டன் அவர்ஸ் எனப்படும் அந்தத் தருணத்தில் நிதானமும் என்ன செய்யவேண்டும் என்ற தெளிவும் மிக முக்கியம்.
- அனைத்து பள்ளி, கல்லூரி, தனியார் மற்று அரசுத் துறை நிறுவனங்களில் உள்ள அனைவருக்கும் தகுந்த இடைவெளியல் இத்தகைய சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சி கட்டாயம் தரவேண்டும்.
- வாகனங்களில் பயணம் செய்பவோர் கட்டாயம் தங்களது ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் இரத்தவகை மற்றும் அவசர தொடர்பு எண் மற்றும் முகவரிகளை வைத்திருக்கவும்.
- 108 போன்றவர்களை நாம் அழைத்தவுடன் அவர்களே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும், மருத்துவ மனைக்கும் தகவல்களைத் தெரிவிக்கலாம். அவர்களிடம் அவசர ஊர்தி அருகில் இல்லை என்றால் அருகில் உள்ள தனியார் அவசர ஊர்தியை தொர்பு கொள்ளும் வசதி போன்றவை மிக உதவியாக இருக்கும்.
- அடிபட்டவரையோ அல்லது அவர உதவி தேவைப்படுவோரையோ பார்க்க நேர்ந்தால் தயவு செய்து உங்களது வாகனத்தில் இடமளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவுங்கள். அப்பொழுது நீங்கள்தான் கடவுள். உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று கருதுங்கள்.
ஏன் இந்த அவசரம். நமது வாழ்க்கையை நாம் தான் வாழ முடியும். அதற்கு நாம் நலமுடன் இருக்க வேண்டும்.
அந்த நண்பர் விரைவில் நலமடைந்து நம்முடன் வாழ இறைவனைப் பிராத்திப்போம்.
முடிந்தவரை நிதானத்துடனும் மனிதாபிமானத்துடனும் வாழ முயற்ச்சிப்போம்.
14 comments:
அதன் பின்பு வீடு வரும் வரை என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. ஏதோ தோற்று விட்டதைப் போன்ற வெறுப்பு. நாளை இதே போன்று நமக்கோ நமக்கு தெரிந்தவருக்கோ நடந்தால், இச் சமுதாயம் இப்படித்தானே வேடிக்கை பார்க்கும் என்ற பயம் கலந்த அருவருப்பு.
மனிதம் இன்னும் செத்துவிடவில்லை நண்பா..
என்ன ஒரு அழுத்தமான பதிவு.
உண்மை ஒருபக்கம் வலிக்கத்தான் செய்கிறது
அதைத் தாங்கள் உணர்த்திய பாங்கு வலியை இன்னும் மிகுவிப்பதாக உள்ளது..
சாலையைக் கடக்கும் பொழுதுகளில் எனக்கும் இதுபோன்ற பல சமூக அவலங்கள் குறித்த வருத்தம் உண்டு..
எனது வலையில் என் கேசவன் என்னும் மாணவர் சாலைவிபத்தின் கொடுமையை நயமாகச் சாடியுள்ளார்..
காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
தலைப்பு - மனிதன் படைத்த விதி
http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post_30.html
எனது மாணவர் கேசவன் அவர்களின் மனிதன் படைத்த விதி என்னும் இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன் ந்ண்பா.
http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post_30.html
நன்றி நண்பர் திரு குணா தமிழ் அவரகளே. நிச்சம் படித்து எனது கருத்தைத் தெரிவிக்கிறேன். அறிமுகத்திற்கு மிக்க நன்றி
அனைத்து பள்ளி, கல்லூரி, தனியார் மற்று அரசுத் துறை நிறுவனங்களில் உள்ள அனைவருக்கும் தகுந்த இடைவெளியல் இத்தகைய சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சி கட்டாயம் தரவேண்டும்.
அந்த நண்பர் விரைவில் நலமடைந்து நம்முடன் வாழ இறைவனைப் பிராத்திப்போம்.
உண்மையான அருமையான படைப்பு நன்றி
நன்றி தோழியே....
Lingesh,
I cannot see any humanity in human being. I recollect some famous quote "No man who is in a hurry is quite cilivilzed". These kind of incident can happen to any common man. We cannot blame common man in this case, when a Minister watching a policeman stuggling for his life in south tamilnadu. A common man is worried of the aftermath of the incident.
He will be questioned and why not he may fall in the trap of our genuine poiliceman who always show their strength to poor innocent people..
I dont see any difference between a Terrorist and a common man
You are 200% correct Karthik.... But i'm sure that the awareness will bring the humanity in common man slowly. Thank you for your comments.
Lingesh அண்ணா, நாட்டில் மழை பேயிரதே உங்களை மாதிரி நாலு நல்ல உள்ளங்களால் தான்
Anonymous தம்பியே... இதுல ஏதும் உள்குத்து இல்லையே....
இந்த அவசர உலகத்தில் மறைந்து கொண்டிருக்கின்றது மனிதாபிமானமும் தான் .. நண்பரே ...
அனைவரும் சிந்திக்கணும் ... நல்ல பகிர்வுக்கு நன்றிங்க நண்பரே
நன்றி அரசன் அவர்களே.
Lingesh அண்ணா, இதுல ஏதும் உள்குத்து இல்லை வெளிகுத்தும் இல்லை. Straight from Heart அண்ணா
நல்லவர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். என்ன சில நேரங்களில் மனித நேயம் மறந்து விடுகிறது.
Post a Comment