சமீப காலங்களில் இந்தியாவில் அதிக அளவு இளம் குழந்தைகள் இறந்து வருகின்றன என்பது அதிர்ச்சியான தகவல். கடந்த சில நாட்களில் பீகாரில் 38 குழந்தைகள் இறந்துள்ளன. அதிலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பது அதிகரித்து வருகிறது. இது எந்த அளவு என்றால் உலகில் இறக்கும் ஐந்தில் ஒரு குழந்தை நம்முடையது; அதாவது 20%. என்ன கொடுமை என்கிறீர்களா. இது நிதர்சன உண்மை.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் குழந்தை இறப்பு விகிதம் மிகவும் குறைவு. அவர்கள் பிறந்து ஓராண்டு முடிந்த குழந்தைகளுக்கும் அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்து, ஏதாவது குறையிருப்பின் தேவையான சிகிச்சைகளை சரியாண நேரத்தில் அளித்துவிடுகின்றனர். இதன் மூலம் குழந்தைகளின் இறப்பு விகிதம் கட்டுப்படுத்துவதுடன் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வதற்கும் இது பேருதவியாக இருக்கிறது.
கீழே தந்துள்ள சில குறிப்புக்கள் குழந்தைகளை ஆரோக்கியமா வளர்க்க உதவும்:
ஆரோக்கியமான குழந்தைகளே வருங்கால ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும்.

- குழந்தை பிறந்தவுடன் சீம்பாலை முதல் ஒரு மணிநேரத்திற்குள் குழந்தைக்குப் புகட்ட வேண்டும்.
- தாய்மார்கள் கட்டாயம் தாய்ப் பாலை குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலம் வழங்கவேண்டும். அதிக பட்சமாக ஓராண்டு அல்லது பால் இருக்கும் வரை தரலாம்.
- தாய்ப்பால் மிகச்சிறந்த இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு அளிக்கிறது.
- தாய்மார்கள் கர்ப்பம் தரித்த காலம் முதல் ஊட்டச்சத்து மிகுந்த உணவை எடுத்துக் கொள்ளவேண்டும்.
- குழந்தை பிறந்தவுடன் பால் அதிகம் சுரக்கும் வகையில் உள்ள உணவு வகைகளைத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவேண்டும்.
- வசதியுள்ளவர்கள் தங்களது பகுதியில் உள்ள ஏதாவது ஒரு வசதியற்ற குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கலாம்.
- அதி முக்கியமான தடுப்பூசிகளை அரசாங்கம் இலவசமாக அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கவேண்டும்.
- அரசாங்க மருத்துவ மனைகளில் தேவையான மருத்துவ வசதிகள் இல்லாமலிருப்பின், அருகில் உள்ள அத்தகைய மருத்துவ வசதியுள்ள, தனியார் மருத்துவமனைகள் குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ வசதியை இலவசமாக வழங்குவதைக் கட்டாயமாக்கலாம் அல்லது செலவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளலாம்.
ஆரோக்கியமான குழந்தைகளே வருங்கால ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும்.
4 comments:
ஆரோக்கியமான குழந்தைகளே வருங்கால ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும்.
>>>
சத்தியமான வரிகள்
நன்றி சி.பி. அவர்களே...
ஆச்சர்யமா இருக்கு, கண்டிப்பாக தாய்ப்பால் குழந்தைக்கு புகட்டவேண்டும்....!!!
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி MANO நாஞ்சில் மனோ அவர்களே. ஆம்... தாய்பாலுக்கு மேலான ஒரு நோய் எதிர்ப்பு மருந்து இந்த உலகில் இல்லை.
Post a Comment